Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur News, Weather, Panchangam, Rasi Palan dated 30 May 2025

ஓசூர் ஆன்லைன் டாட் காம் இன் ஓசூர் விரைவு செய்திகள்... 

ஓசூர் எம்ஜிஆர் சந்தை மற்றும் மீன் சந்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.  

கமலஹாசன் கன்னட மொழி பற்றிய பேச்சை, திட்டமிட்டு பாஜக, தவறான நோக்கத்துடன் பரப்புரை மேற்கொண்டு வருவதாக, ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டினார். 

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் மாங்காய் ஏற்றி வந்த சரக்குண்டு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது ஒருவர் பலி, நான்கு பேர் கவலைக்கிடம். ஒன்பது பேர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பெற்று வருகின்றனர்.

ஓசூரை அடுத்த ஜவளக்கிரி அருகே தோட்டத்தில் புகுந்து பலாப்பழங்களை ரசித்து உண்டு மகிழ்ந்த காட்டு யானைகள்! கடந்த சில நாட்களாக, நான்கு காட்டு யானைகள் இப்பகுதியில் சுற்றி திரிவதாகவும், அவை பல்வேறு விளை பொருட்களை வீணடித்த நிலையில் பலாப்பழங்களையும் விட்டு வைக்கவில்லை என உழவர்கள் வேதனை!

ஓசூர் சுசுவாடி பகுதியில் Upkar லேஅவுட் என்கிற குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, சிறுத்தை நடமாடியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என இதுவரை தெரிவித்து வருகின்றனர். 

அஞ்செட்டி அருகே குந்து கோட்டை பிரிவு பனை காப்புகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அப்பகுதியில் பெண் யானை எலும்புக்கூடு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யானைக்கு 7 வயது இருக்கும் எனவும், யானையின் உடலில் காயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். 

ஓசூர் அருகே உளியாளம் பகுதியில், ஐந்து காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து முட்டைகோஸ் சௌசௌ கேரட் போன்ற விளை பொருட்களை வீணடித்து வருகின்றன.  அவற்றை சானமாவு காட்டுப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, புதிய மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இரண்டாவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் கொலை வழக்கில், காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.  பெயிண்டரை காணவில்லை என நண்பர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 25 நாட்கள் கழித்து, அவர் கொலை செய்து புதைக்கப்பட்டதை காவல் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே, தொட்டபேளூர் எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை காண படிவம் க்யூ ஆர் கோடு நிகழ்நிலையில் வழங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  

நிகழ்நிலை தளங்கள் மூலம் முன்பதிவு செய்து, அரைகுறை ஆடையுடன், முழு போதையில் ஆடும் பெண்களுடன், குத்தாட்டம் போட்ட ஆண்கள்.  ஓசூர் அடுத்த பேரிகை அருகே தென்னந்தோப்பில் குத்தாட்டம்.  பீகார், கோவா மற்றும் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் வினவி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி திமுக கழகத் துணைச் செயலாளர் கே ரவிக்குமார் பிறந்தநாள் விழா கோவில்களில் சிறப்பு பூஜையுடன் பழைய மத்திகிரி பகுதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஓசூர் மத்திகிரி அடுத்த கப்பக்கல் பகுதியில், கஞ்சா விற்ற ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது.

தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகளுக்கு, பூமி பூஜை நடைபெற்றது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: