ஓசூருக்கான வளர்ச்சித் திட்டமாக கருதப்பட்ட, பெங்களூருவை நடுவாக வைத்து, வட்ட இருப்பு பாதை திட்டம், ஓசூர் வழியாக அமைப்பதாக இருந்தது. அ.தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை முயற்சியினால், ஓசூர் வழியாக அந்தத் வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்படுவது இல்லை என ஒன்றிய அரசு அறிவிப்பு.
ஆண்டுதோறும் மா விலை வீழ்ச்சி தொடர்வதால், மா சாகுபடி உற்பத்தியாளர்கள், கடும் வேதனை. இந்த ஆண்டு ஒரு டன் மா, ரூபாய் 2000 என்ற அளவில் விற்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த சூளகிரி துரை ஏரி, மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கையால், ஏரிக்கான நீர்வழிப் பாதை தூர்வாரப்பட்டு, இந்த ஆண்டு ஏரி நிரம்பியது.
அந்திவாடியில் சாலையோரம் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோயில், சாலை அகலப்படுத்தும் பணியை தொடர்ந்து, நகர்த்தப்பட்டது.
ஓசூர் அருகே, அரளிக்காய்களை என்னவென்று தெரியாமல் தின்ற நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பட்டாம்பூச்சிகள், வண்டிகளில் சிக்கி, லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றன. வலசை வரும் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை.
ஓசூர் காடுகளில் மட்டுமே காணப்படும் இளம்பச்சை நிற புறாக்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை.
500க்கும் மேற்பட்ட மாற்ற கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டதாக தகவல்.
ஐந்து டன் ஆட்டுக்கறி, 3 டன் கோழிக்கறி, சமைத்து, ஓசூர் அருகே நல்லூர் கரகதம்மா கோவில் திருவிழாவில் மக்களுக்கு விருந்தாக வழங்கப்பட்டது. சுமார் 30,000 விருந்துண்டதாக தகவல். அனைத்து ஏற்பாடுகளையும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து, 12 மினி பேருந்துகள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே ஏணிமுச்சந்திரம் ஊருக்குள் கடந்த நாள் விடி காலை, ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்தது. ஊருக்கு அருகே பீன்ஸ், தக்காளி, மாம்பழம் ஆகிய விளை பொருட்களை தின்று சென்றது.








