Periyar’s 147th Birth Anniversary Celebrated in Hosur 🌹 | Hosur News Update - Video
Periyar’s 147th Birth Anniversary Celebrated in Hosur 🌹
📅 வெளியீடு நாள்: 17-09-2025
📄 விளக்கம்
At Periyar Square, Hosur, district Dravidar Kazhagam members and leaders from various parties paid floral tribute to Thanthai Periyar on his 147th birth anniversary.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஒசூர் உள்வட்ட சாலையில், முனீஸ்வரன் நகர், வ உ சி நகர் சந்திப்பு, தந்தை பெரியார் சதுக்கத்தில், பெரியார் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாநகர தலைவர் து ரமேஷ் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சு. வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா. சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோ. கண்மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் அ. கிருபா, மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் ச. எழிலன், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர். நீலகண்டன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தினேஷ், மாமன்ற உறுப்பினர்கள் தேவி மாதேஷ், பாக்கியலட்சுமி, திமுக வட்ட செயலாளர் வடிவேல், திமுக மாநில பொறியாளர் அணி துணைத் அமைப்பாளர் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் கெஜந்திரமூர்த்தி, நல்லூர் ஊராட்சி மேனாள் உறுப்பினர் கலைசெழியன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சந்துரு, சத்தியமூர்த்தி, திராவிடர் கழகம் ஈரோடு பாண்டியன், சுரேஷ்,சிவாஜி, காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் மற்றும் திரளான திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சினர் கலந்துகொண்டனர்.