Hosur's Santhapuram Lake Overflow ⚠️ Will Santhapuram village Get a Safer Road? | Hosur News Update - Video
Hosur's Santhapuram Lake Overflow ⚠️ Will Santhapuram village Get a Safer Road?
📅 வெளியீடு நாள்: 18-09-2025
📄 விளக்கம்
🚧 Santhapuram Lake overflow puts local lives at risk. With floods washing over the road, residents are urging MLA Y. Prakash for:
A raised bridge 🌉
Safety barricades on both sides of the road 🚧
A permanent solution to blocked drains and flood flow 🌊
This is not just a road — it’s a lifeline for the people of Santhapuram. The public’s demand: “Give us a safe road before lives are lost.
மறுகால் பாயும் சாந்தாபுரம் ஏரி! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள்! பாலம் உயர்த்தி கட்டப்படுமா? அதுவரை சாலையின் இரு மறுங்கிலும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுமா? பாதுகாப்பான சாலை வசதி வேண்டி சாந்தாபுரம் மக்கள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்களுக்கு கோரிக்கை.
ஓசூரில் முதன்மையான ஏரிகள் மொத்தம் ஐந்து. இவற்றில் வறண்ட ஊழிகளில் கூட தண்ணீர் நிற்கும். இதில் குறிப்பிடத்தக்கது, சாந்தாபுரம் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், வழிந்து ஓடுவதற்கு ஓடை உள்ளது. ஓசூரின் பிற பகுதிகளைப் போலவே, சாலையின் கீழ் பகுதியில், நெகிழிப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஓடை அடைக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் சாலை மேல் பகுதி வழியாக பாய்ந்து செல்கிறது.
மாற்றுப் பாதை எதுவும் இல்லாத சூழலில், இந்தச் சாலை வழியாக பயணிக்கும் பகுதி மக்கள், பாதுகாப்பான சாலை அமைத்து தர கோரிக்கை விடுக்கின்றனர்.