Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 29 June 2025 | Hosur News Update - Video
Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 29 June 2025
📅 வெளியீடு நாள்: 29-06-2025
📄 விளக்கம்
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 8930. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 119.
வேப்பனபள்ளி அருகே உள்ள வள்ளிநகரம் பகுதியில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் குறவர் இன மக்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு.
ஓசூர் 14 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கான பதாகை வெளியீடு. மாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோருடன் புத்தகத் திருவிழா குழுவினர் ஆலோசனை.
அஞ்செட்டியில் பள்ளி மாணவன் ஓட்டி சென்ற டிராக்டர் மோதி, ஒருவர் பலி. மற்றொருவருக்கு கால் முறிவு எனத் தகவல்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில், பள்ளிகளில் STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் நடுவங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
ஓசூர் குமுதேபள்ளி அருகே சாலை விபத்து. அடுத்தடுத்து வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஓசூரில், மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல்.
அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டு நிகழ்நிலையில் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க 6000 ரூபாய் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி காந்த் கேட்டதாக கூறப்படுகிறது. முன்பணமாக 1500 ரூபாய் பெறும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் பிடிபட்டார். கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராயக்கோட்டையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல் துறையினர். பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி கடத்த முயன்ற புகையிலை பொருட்கள் சிக்கியது. கடத்த பயன்படுத்திய இன்னோவா கிறிஸ்ட் வண்டியும் கைப்பற்றப்பட்டது. வண்டியை ஓட்டி வந்த வரையும் கைது செய்த காவல்துறையினர்.