Looking for a perfect one-day picnic spot near Hosur? | Hosur News Update - Video
Looking for a perfect one-day picnic spot near Hosur?
📅 வெளியீடு நாள்: 19-09-2025
📄 விளக்கம்
🌊 Krishnagiri Dam Day Trip – Picnic, Boating, Eating, Hair-Pin Bend Driving near Hosur! 🛶✨
Here’s why Krishnagiri Dam should be on your weekend list:
🏞️ Scenic dam built across the Thenpennai river under K. Kamaraj’s vision
🦌 Lively park with deer & photo-worthy spots 🌿
🍴 Delicious fish dishes at nearby eateries
🏛️ Historic Traveller’s Bungalow once visited by Kamaraj & Kakkkan
🛶 Boat rides & mountain lake views for a refreshing experience
👉 A trip that mixes history, nature, food & fun – all in one day!
#KrishnagiriDam #HosurTourism #DayTripFromHosur #TamilNaduTourism #WeekendVibes #PicnicSpot #FamilyTrip #NatureEscape
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஒரு நாள் சுற்றுலா! கிருஷ்ணகிரிக்கு சுற்றுலாவா? என்கிற கேள்வி உங்கள் மனதில் எழலாம்!. கிருஷ்ணகிரியில், மிகப்பெரிய அணை ஒன்று உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் நேரடி பார்வையில் கட்டப்பட்டது.
ஏராளமான மக்கள் நடமாட்டம் கொண்ட அணையின் பூங்கா பகுதி. துள்ளிக்குதித்து நுனிப்புல் மேய்ந்து அழகு காட்டும் மான்கள். புகைப்படம் எடுக்க விரும்புவர்களுக்கு, அருமையான எழில் கொஞ்சும் பூங்கா.
மீன் உணவு விரும்பிகளுக்கு ஏராளமான உணவகங்கள். அருகிலேயே அழகிய கட்டடக்கலையுடன் கூடிய, காமராஜர், கக்கன் போன்றோர் தங்கிச்சென்ற விருந்தினர் மாளிகை. தனிமை விரும்பிகளுக்கு, அருகிலேயே மலைப் பாங்கான, இயற்கை ஏரியை கொண்ட ஒரு பகுதி.
காலையில் அணையை சுற்றி பார்த்துவிட்டு, மலை பாங்கான ஏரிக்கு Hair-pin bend வளைவுகளில் வண்டியில் பயணித்து, சற்று நேரம் உணவருந்தி இளைப்பாரி வீட்டிற்கு கிளம்பலாம் என்றால், தேசிய நெடுஞ்சாலை அருகில் படகு சவாரி உங்களை அன்புடன் அழைக்கும். பிற்பகல் படகு சவாரியை முடித்துவிட்டு, வரும் வழியிலேயே உணவகங்களில் உணவு அருந்தி அன்றைய நாள் பொழுதை குடும்பத்தாருடன் அற்புதமாக கழிக்கலாம்.