Varalakshmi Amman: How a Coconut, Kalasam and Amman Face Come Together for Varalakshmi Vratham | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Varalakshmi Amman: How a Coconut, Kalasam and Amman Face Come Together for Varalakshmi Vratham

📅 வெளியீடு நாள்: 12-08-2026

📄 விளக்கம்

How is the traditional Varalakshmi Amman form created for Varalakshmi Vratham? In many Telugu and Kannada households around Hosur, an ornamented kalasam, a separate Amman face and a coconut are brought together to create the traditional form.

Varalakshmi Vratham is observed with prayers for prosperity, wealth and family well-being. With silver prices rising, German silver pooja articles that resemble silver are also attracting attention during the festival season in Hosur and Denkanikottai.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு தேங்காய்... ஒரு கலசம்... வரலட்சுமி அம்மனை எப்படி உருவாக்குகிறார்கள் தெரியுமா?

அலங்கரிக்கப்பட்ட கலசம் தனியாக... அம்மன் முகம் தனியாக... இரண்டையும் ஒரு தேங்காயுடன் இணைத்தால்... வரலட்சுமி அம்மன் வடிவமாகிறார்!

குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் வீடுகளில், செல்வம், வளம் மற்றும் குடும்ப நலனை வேண்டி கொண்டாடப்படும் முதன்மையான விரதம் — வரலட்சுமி பண்டிகை விரதம்.

வரலட்சுமி பூஜையில் வெள்ளி பொருட்களுக்கு முதன்மை வழங்கப்படுகிறது. வெள்ளி விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு, வெள்ளி போன்றே ஜொலிக்கும் ஜெர்மனி வெள்ளியில் செய்த பூஜை பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன.

பெங்களூருவை காட்டிலும் மலிவான விலையில், ஓசூர் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பண்டிகை பொருட்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருவதாக, இந்த காணொளியை பதிய உதவிய தேன்கனிக்கோட்டை பூஜை பொருள் கடைக்காரர் ரஞ்சித் நம்மிடம் தெரிவித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads