ஓசூர் மழையும் போக்குவரத்து நெரிசலும்! ஏன்? எதனால்? | Hosur News Update - Video
ஓசூர் மழையும் போக்குவரத்து நெரிசலும்! ஏன்? எதனால்?
📅 வெளியீடு நாள்: 20-09-2025
📄 விளக்கம்
Why is Hosur Flooding After Every Rain? 🌧️ Traffic Chaos Explained!
Waterlogging & traffic jams in Hosur aren’t just bad luck. 🚧
Over the past few days:
🌧️ Sudden cloudbursts with 65–73 mm/hr rainfall
🌡️ Temperature & Dew Point hitting the same levels
⬇️ Drop in air pressure to 1011 hPa
👉 Together, these created short but intense downpours, flooding Hosur’s roads and choking traffic. This video breaks down the science in simple words — so you’ll know why it happens and what can be done.
#Hosur #HosurRains #TrafficJam #TamilNadu #WeatherUpdate #HosurOnline #Flooding
ஓசூர் சாலைகளில் கடந்த சில நாட்களாக மழைக்குத் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஏன்?
செப்டம்பர் 17ஆம் நாள், அதாவது புதன்கிழமை இரவு பதினொன்றே முக்கால் மணி அளவில், மணி நேரத்திற்கு 69 மில்லிமீட்டர் என்ற அளவில் மழை பொழிந்துள்ளது.
வியாழக்கிழமை, மாலை 6 58 மணி அளவில், மழை மணிக்கு 73 புள்ளி இரண்டு மில்லி மீட்டர் என்கிற அளவில் இருந்துள்ளது. வெள்ளிக்கிழமை, அதாவது கடந்த நாள், மாலை 6 9 மணி அளவில், மழை மணிக்கு 65. நான்கு மில்லி மீட்டர் அளவில் இருந்துள்ளது.
ஏன் இத்தகைய பெருமழைகள்? வெப்பநிலையும், பனிப்புள்ளி அளவும் அதாவது Dew Point-ம், மழை பொழியும் நேரத்தில் ஒரே அளவில் இருந்துள்ளன.
தரவுகளின்படி, மழை தொடர்ந்து பெரும் மழையாக பொழியவில்லை. குறைந்த நேரத்திற்கு மட்டுமே பெருமழையாக இருந்துள்ளது. இது திடீர் மழை மேகங்கள் ஒரே இடத்தில் குவிந்ததற்கான அடிப்படையை காட்டுகிறது.
கடந்த 18 ஆம் நாள், அதாவது வியாழக்கிழமை, 1011 HectoPascal வரை, காற்றழுத்தம் குறைந்துள்ளது. இது திடீரென ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது மேல்மண்டல சுழற்சி இருந்ததை காட்டுகிறது.
இம்மூன்று விளைவுகளும், ஓசூர் பகுதியில் நிலவுவதால், ஓசூரில் கடந்த சில நாட்களாக பெருமழை பொழிகிறது. கட்டுக்கடங்காத பெருமழை பொழிவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.