ஓசூரில் "பழைய குருடி கதவை திறடி"! Hosur RC Church Junction Chaos Again! 🚦 Public Money Wasted? 💸 | Hosur News Update - Video
ஓசூரில் "பழைய குருடி கதவை திறடி"! Hosur RC Church Junction Chaos Again! 🚦 Public Money Wasted? 💸
📅 வெளியீடு நாள்: 21-09-2025
📄 விளக்கம்
Hosur’s busiest RC Church Junction — where Denkanikottai Road meets the Inner Ring Road — has once again slipped into chaos.
🛑 CM’s visit → shops removed, trees planted 🌳
🚮 Warning boards: Rs 1000 fine for littering
❌ Now? Shops back among trees, traffic choking again!
💸 Public money for beautification = wasted overnight
👉 Citizens ask: Why beautify only for VIP visits?
👉 Isn’t it time Hosur got real, lasting solutions?
ஓசூரின் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்று, தேன்கனிக்கோட்டை சாலை மற்றும் உள் வட்டச் சாலை சந்திக்கும் R C Church சந்திப்பு பகுதி.
முதலமைச்சரின் வருகைக்காக, இந்த சாலை சந்திப்பை இயங்கி வந்த சாலை ஓர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு, அப்பகுதி அழகு படுத்தப்பட்டது.
மாநகராட்சி சார்பில், அழகு படுத்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டினால், ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்படும் என்கிற எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக இப்போது மீண்டும் மரங்களுக்கு ஊடாக கடைகள் அமைக்கப்பட்டு "பழைய குருடி கதவை திறடி" என்கிற பழமொழி போல, சூழ்நிலை மாறியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் அழகு படுத்தப்படும் செலவினங்கள், தலைவர்கள் வந்து சென்றவுடன் வீணடிக்கப்படுவது, தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர் பெருமக்களை முகம் சுளிக்க வைப்பதாக தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.