🚍 Hosur New Bus Stand Flyover Work Begins! Will It Solve Traffic? 🛣️ | Hosur News Update - Video
🚍 Hosur New Bus Stand Flyover Work Begins! Will It Solve Traffic? 🛣️
📅 வெளியீடு நாள்: 23-09-2025
📄 விளக்கம்
Hosur’s new bus stand near Bathalapalli gets a major boost with flyover construction work starting! 🚧
👉 Locals demand proper road widening & smart traffic planning.
👉 Setback spaces must be used fully to avoid future chaos.
👉 Will this project finally ease Hosur’s congestion?
#Hosur #Infrastructure #BusStand #Flyover #RoadWidening #Traffic
ஓசூர் பத்தலபள்ளி அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் நேர் எதிர்ப்புறம் கட்டப்படவிருந்த மேம்பாலத்திற்கான பணிகள், கடந்த நாள் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
பணிகள் துவங்கியதற்கு அடையாளமாக, i t c Fortune ஓட்டல், நட்சத்திர விடுதி அருகே துவங்கி, வடிகால் ஓடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஓசூர் நகரின் நடுப்பகுதிகளில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலையில் Set-back விடப்பட்ட 23 அடி பகுதியை முழுமையாக பயன்படுத்தி சாலை அமைக்காததால், அணுகு சாலைகள், ஒரு வழிச்சாலையாக செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Set-back விடப்பட்ட பகுதிகளை முழுமையாக பயன்படுத்தி சாலையை விரிவு படுத்த வேண்டும் எனவும், அப்படி முறையாக செய்தால், அணுகு சாலைகள் 46 அடி அகலம் உள்ளவையாக கிடைக்கும் எனவும், ஓசூர் நகரின் பிற பகுதிகளில் செய்தது போன்று, Set-back பகுதிகளை வீணடிக்க கூடாது என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஓசூருக்கு புதிய பேருந்து நிலையம் செயல்படுவதும், அதற்காக புதிய பாலம் ஒண்ணே கால் கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுவதும் வரவேற்கக் கூடிய ஒன்று என ஓசூர் மக்கள் கருதுகிறார்கள்.
இதே நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பிற பாலக் கட்டுமானத்திற்கான தாமதத்திற்கு, மண் கிடைக்கவில்லை, கல் கிடைக்கவில்லை என, தமிழ்நாடு அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக போலியான தகவல்களை முன்னிறுத்தி பாலம் கட்டுமானத்தில் தொய்வு காட்டியது போல் அல்லாமல், விரைந்து பாலப் பணிகள் நடைபெற வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.
மாற்றுப்பாதைகளை முறையாக அமைத்துவிட்டு, அதன் பின் பாலப்பணிகளை துவங்க அனுமதிப்பதே சரியானதாக இருக்கும் என சாலையை பயன்படுத்தும் பயணிகள் கருதுகின்றனர்.
கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முறையான ஆணைகள் வெளியிட வேண்டும் என பொதுமக்களும் தன்னார்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.