🚨 Hosur Breaking! Rs 90 Cr Flyover at Thally Road Railway Gate 🚧 | Major Relief for Traffic! | Hosur News Update - Video
🚨 Hosur Breaking! Rs 90 Cr Flyover at Thally Road Railway Gate 🚧 | Major Relief for Traffic!
📅 வெளியீடு நாள்: 24-09-2025
📄 விளக்கம்
Breaking News from Hosur! 📰 A Rs 90 Crore flyover is set to rise at the Thally Road Railway LC Gate (LC 104), ending years of heavy traffic jams 🚦.
🔹 Why this matters:
LC Gate traffic chaos to end 🚧
Butterfly model flyover proposed 🦋
Public demand finally addressed 🙌
Project led by Hosur MLA Y. Prakash 🏗️
This flyover will be similar to Coimbatore RS Puram’s round model and promises permanent relief to thousands of daily commuters.
👉 A proud moment for Hosur.
#Hosur #BreakingNews #Flyover #Infrastructure #TrafficRelief #ThallyRoad
ஓசூரில் தொண்ணூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில், தளி சாலையில் உள்ள இருப்புப் பாதைக்கு மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க இருக்கிறது.
ஓசூர் - தளி சாலையின் குறுக்கே, எண் L C நூற்று நான்கு கொண்ட இருப்புப் பாதை கடக்கும் கதவு செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, ஹூப்ளியை தலைமை இடமாகக் கொண்ட தென்மேற்கு ரயில்வே, நேர்பாலம் கட்டுவது என முடிவெடுத்து அறிவித்தது.
இதை அறிந்து கொண்ட நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், அப்பகுதியில் Butterfly வடிவமைப்பிலான மேம்பாலம் கட்டுவதே நிரந்தர தீர்வு என்பதை மாநில அரசிற்கும், தென்மேற்கு ரயில்வே மேலாண்மைக்கும் அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் ஆர் எஸ் புரத்தில் கட்டப்பட்டுள்ளது போன்று, வட்ட வடிவிலான மேம்பாலம் கட்டுவதற்கு, சுமார் தொண்ணூறு கோடி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க இருக்கின்றன.
இம்முயற்சியை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.