Hosur’s Hidden Paradise 🌿 The Grand Botanical Garden Near Hosur! | Hosur News Update - Video
Hosur’s Hidden Paradise 🌿 The Grand Botanical Garden Near Hosur!
📅 வெளியீடு நாள்: 26-09-2025
📄 விளக்கம்
✨ Not just Ooty, Kodaikanal, Yercaud, or Lal Bagh… Hosur too has a grand Botanical Garden!
📍 Located near Denkanikottai in Akalakkottai, this paradise spreads across hundreds of acres.
🌹 What makes it special?
Tiny flowering plants blooming with wonder 🌸
Rare grafting roses where “female” plants thrive inside the “male” 🌱
Countless varieties of plants that tempt you to take them home 🏡
A perfect weekend getaway for nature lovers & plant enthusiasts! 🌿
#Hosur #BotanicalGarden #Agalakottai #TamilNaduTourism #HosurTravel #NatureLovers #GardenVibes #WeekendTrip
ஓசூர் அருகே மிகப் பிரமாண்டமான Botanical Garden! ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, லால் பாக் ஆகிய இடங்களில் அமைந்துள்ள Botanical Garden அளவை ஒப்பிடுகையில், இது மிகப் பெரியது. இங்கிருந்து தான் பல செடிகள் அங்கு செல்கின்றன என்பதும் இதன் சிறப்பு! விடுமுறை நாட்களில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில், சிறப்பிடம் கொண்டது இவ்வூர்.
குட்டி குட்டியாய் பூச்செடிகள். என்னென்ன வகை? பட்டியலிட இயலாது! ஏனெனில் அத்தனை - அத்தனை வகைகள். அவை சின்னஞ்சிறியவையாய் இருக்கும் பொழுதே பூத்துக்குலுங்கும் வியப்பு!
ஆண் செடியினுள் புகுந்து, அதன் சத்துக்களை உறிஞ்சி தன்னை வளர்த்துக் கொள்ளும் பெண் செடி! ஆமாம். நாம் குறிப்பிடுவது பூத்துக் குலுங்கும் ரோஜா ஒட்டுச் செடிகளை தான்!
அகலக்கோட்டை. ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, அமைந்துள்ளது. ஊர் முழுவதும் துவங்கிய நர்சரி செடி உற்பத்தி, இன்று அப்பகுதியின் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து கிடக்கிறது.
ஏராளமான வகை செடிகள் ஒரே இடத்தில் காண்பது, அவற்றை வாங்கி நம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
அகலக்கோட்டை போங்க. உங்களுக்கு என்ன நிறத்தில் ரோஜா பூச்செடி வேண்டுமோ அதை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாங்க! அது மட்டுமா, ஏராளமான வகை செடிகள், நீங்கள் அவற்றை அரவணைத்து செல்வீர்கள் என்கிற ஆவலில் உங்களுக்காக அங்கே காத்திருக்கின்றன.