Hosur’s Two Terrors: ஒன்று நாய். மற்றொன்று நஹாய்! | Hosur News Update - Video
Hosur’s Two Terrors: ஒன்று நாய். மற்றொன்று நஹாய்!
📅 வெளியீடு நாள்: 26-09-2025
📄 விளக்கம்
Stray Dogs 🐕 vs NHAI Neglect 🛣️ — Who’s Protecting Us?
Hosur is under siege from two very different dangers — thousands of stray dogs biting dozens every day, and what locals call “NHAI neglect” on the Krishnagiri–Hosur highway that keeps causing crashes.
• 🐾 Volunteers say ~40,000 stray dogs roam the area; ~50+ bite victims daily. Costly kennelling schemes raise questions.
• 🚨 Locals blame poor road upkeep and lax oversight by the National Highways authority for repeated, deadly accidents.
• 📢 Demand: Immediate action — humane stray-dog control, real accountability from highway authorities, and stronger road-safety measures.
Share this. Tag officials. Raise your voice — public safety can’t wait.
ஓசூருக்கு துன்பங்களை தருவது இரண்டு. ஒன்று நாய். மற்றொன்று நஹாய்!
ஓசூரில் சுமார் 40,000 நாய்கள் இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஓசூர் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடியால் பாதிப்படைவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாய் ஆர்வலரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஆண்டொண்டிருக்கு சுமார் 12,000 நாய்களுக்கு கருத்தடை செய்வதாக கூறி, ஒவ்வொரு நாயின் பெயரிலும் ஆயிரம் ரூபாய் கணக்கு எழுதப்படுகிறது. இவர்களின் கணக்குப்படி பார்த்தால், ஓசூரில் இருக்கும் நாய்களை விட கருத்தடை செய்து கொண்ட நாய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்! ஊழல் பெருச்சாளிகளால் அப்பாவி நாய்கள் வெறுக்கப்படும் நிலைக்கு உள்ளாகி உள்ளன என்றார்! இவரது கருத்து சரிதானா? என்பது நமக்கு தெரியவில்லை!
அடுத்ததாக, விபத்துக்களை ஏற்படுத்தி மக்களை கொல்லும் நஹாய்! கிருஷ்ணகிரி - ஓசூர் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை மேலாண்மை மேற்கொள்ளும் நஹாய் எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், நாளொரு பொழுதும் இச்சாலை பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கதை ஆகிவிட்டது. இந்த நஹாயிடம் இருந்து, ஒன்றிய அரசின் தரைவழி போக்குவரத்து அமைச்சர் Nitin Gadkari தான் இச்சாலையில் பயணிக்கும் மக்களை காக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.