Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 01 July 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 01 July 2025

📅 வெளியீடு நாள்: 01-07-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 8915. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 119.

ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் அலியாளம், தூள்செட்டி ஏரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி உழவர் அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் மாங்கனி கண்காட்சி நிகழ்ச்சி கம்பன் கழகத்தின் சார்பில் தமிழர்களின் தொன்மையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஓசூர் சட்டமன்ற தொகுதி மாநகரம், ஒன்றியம், சூளகிரி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர்கள் சேர்க்கை பயிற்சி பாசறை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை அருகே, அலேநத்தம் ஊரில், பொது வழங்கல் கடை சுமார் இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 200க்கும் கூடுதலான பயனாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சூசூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 30 லட்சம் ரூபாயை மதிப்பீட்டில் கழிப்பறைகள் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

கெலமங்கலம் அருகே ஏல சீட்டு நடத்தி வந்த நபர் சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து விட்டு, பணத்தை தராமல் ஏமாற்றுவதாக அவரிடம் சீட்டு சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஓசூர் சூசுவாடி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு. மேம்பாலம் பணிக்காக கொண்டுவரப்பட்ட ஜல்லி குவியலில் இருந்து, எலும்புக்கூடு வெளிப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசூர் அந்திவாடி அருகே, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு இயந்திரம் அமைக்கும் பணிக்கான பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், 37 வது வார்டு உறுப்பினர் சென்னீரப்பா, 36 ஆவது வார்டு உறுப்பினர் பாக்யலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads