Residents Report Multiple Peacock Deaths Near Shoolagiri; Investigation Sought | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Residents Report Multiple Peacock Deaths Near Shoolagiri; Investigation Sought

📅 வெளியீடு நாள்: 06-03-2026

📄 விளக்கம்

Residents in the Shoolagiri region near Hosur have reported the deaths of several peacocks in recent days. An injured peacock was also reportedly found earlier today.

Environmental volunteers have raised concerns that blasting activities near rock formations and the use of pesticides in agricultural fields could potentially affect wildlife in the area.

Volunteers and residents have urged the district administration to conduct an investigation to determine the cause of the deaths and ensure appropriate measures are taken to protect wildlife.

ஓசூர் அருகே, சூளகிரி வட்டாரத்தில் முப்பதற்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று முற்பகலில், படுகாயம் அடைந்த நிலையில் ஒரு மயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நம்மிடம் பேசிய தன்னார்வலர் ஒருவர், "அருகில் உள்ள பாறைகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்காக வைக்கும் வெடி, மயில் உள்ளிட்ட பிற காட்டு விலங்குகளையும், மனிதர்களின் குடியிருப்பு பகுதியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது" என கருத்து தெரிவித்தார்.

மேலும் "விளை நிலங்களில் அடிக்கப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளால், மயில் போன்ற உயிரினங்கள் மடிந்து விழுகின்றன. அப்படியானால் இந்த மருந்துகள் மனிதர்களில் எத்தகைய கேடை விளைவிக்கும்" என கேள்வி எழுப்பினார்.

இந்தத் தீங்கான நடைமுறைகளை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என தன்னார்வலர்களும் பொதுமக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads