Hosur’s Comedy Criminal! 🤦♂️ Thief jumps off bridge, files complaint for being beaten! | Hosur News Update - Video
Hosur’s Comedy Criminal! 🤦♂️ Thief jumps off bridge, files complaint for being beaten!
📅 வெளியீடு நாள்: 30-09-2025
📄 விளக்கம்
Only in Hosur!
A thief steals a lorry 🚛, gets caught, and beaten black & blue!
In pain, he jumps off a bridge to escape 🤯
Now he demands the police to punish those who beat him! 🤣
👉 Even the cops are scratching their heads — case file பண்ணலாமா இல்லையா? 🤷♂️
#Hosur #FunnyNews #ComedyCrime #ThiefStories #TamilNadu #ViralNews #PoliceComedy
ஓசூர் காவல்துறையினரையே தலை சுற்ற வைத்த பலே கில்லாடி. ஓசூர் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த தகவல், hudco காவல்துறையினருக்கு கிடைத்தது. காவலர்கள், அடிபட்டு கிடந்தவரிடம் வினவிய போது, அரசுப்பேருந்து பணிமனை அருகே உள்ள தேன்கனிக்கோட்டை சாலை - தேசியநெடுஞ்சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள மேம்பாலம் மீது வைத்து, தம்மை நான்கு பேர் கும்பல் கும்மு கும்மு என்று கும்மியதாகவும், அடி பொறுக்காமல் பாலத்தின் மீதிருந்து குதித்து உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் தீவிர விசாரணையில், காவல்துறையினரே அதிர்ந்து போகும் அளவிற்கான தகவலை அடிபட்டு கிடந்தவர் வெளியிட்டார்.
அதாவது, தாம் பெரிய திருடர் என்றும், அத்திப்பள்ளி அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றை ஓட்டுநர் கீழே இறங்கி சென்ற நிலையில், திருடி வந்ததாகவும், அதை உடனடியாக கவனித்த ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகியோர், தம்மை காரில் பின் தொடர்ந்து வந்து, பாலத்தின் மீது வைத்து மடக்கிப் பிடித்ததாக தெரிவித்தார். சட்டையை மடக்கி பிடித்து, மடக்கி மடக்கி அவர்கள் அடித்துள்ளனர். வலி பொறுக்க முடியாத நிலையில், சட்டையை கழற்றி விட்டு, பாலத்தின் மீதிருந்து குதித்துள்ளார் இந்த பலே திருடன்!. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, லாரியை திருடியதற்கு இவ்வளவு அடியா? தன்னை அடித்தவர்கள் மீது வழக்குப்பதிந்து தண்டிக்க வேண்டும் என திருடர் கோரிக்கை விடுத்துள்ளார்.
hudco காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் இப்பொழுது இந்த கில்லாடி மீது வழக்கு பதிவதா? வேண்டாமா? என குழப்பத்தில் உள்ளனர்.