Hosur’s Thousand-Year-Old Temple & Ancient Edict on Feeding the Hungry! 🏛️🍲 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur’s Thousand-Year-Old Temple & Ancient Edict on Feeding the Hungry! 🏛️🍲

📅 வெளியீடு நாள்: 30-09-2025

📄 விளக்கம்

Did you know? 1000 years ago, rulers of Hosur declared it a crime not to feed the hungry! 🙌

📍 Inside the historic Pennesar Mada, Penneswarar Temple near Kaveripattinam, inscriptions by Veera Ramanathan (1295 AD) reveal this extraordinary royal decree.
⚡From the Cholas to the Vijayanagara kings, this temple on the banks of South Pennar has been nurtured for centuries.
➡️ Watch the untold history of Hosur’s compassion-driven rulers!

#HosurHistory #TamilHistory #PenneswararTemple #CholaDynasty #Heritage #Inscriptions #HosurOnline

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள், ஒய்சாளர்கள் மற்றும் அதன் பின் வந்த விஜயநகர பேரரசர்கள் தொடர்ந்து மேம்படுத்தி சென்ற பெண்ணேஸ்வர மடத்தில் உள்ள பென்னேஸ்வரன் உடையார் கோவிலுக்கு செல்லலாம், வாங்க!.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிச்சை எடுப்பது குற்றம், பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிக்காமல் இருப்பது அதனினும் குற்றம், என்று அரசாணை இட்ட ஓசூர் பகுதியை ஆட்சி செய்து வந்த அரசனின் கல்வெட்டு.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்திருப்பது பென்னேஸ்வரமுடையார் கோவில். இது ஓசூரில் இருந்து சுமார் எழுவது கிலோமீட்டர் தொலைவில், காவேரிபட்டினம் அருகே அமைந்துள்ளது. கிபி 1295 ஆம் ஆண்டு, ஓசூர் பகுதியை ஆட்சி செய்து வந்த வீர ராமநாதன், "சோறு வேண்டுதலும் பிற நலிவுகள் செய்தலும் தவறு" என்று குறிப்பிட்டு, உணவளிக்காதவர்கள் எப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கோவிலில் கல்வெட்டு வைத்துள்ளது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் இங்கே சிவபெருமானுக்கு, பெண்ணை நாயினார் என்ற பெயரில் ஆலயம் துவங்கி, அடுத்தடுத்து வந்த அரசர்கள், இந்த கோவிலுக்கு பல்வேறு விதமான சிறப்புகள் செய்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads