Hosur Lakes Drying by 2046? 🚨 What the New Master Plan Reveals! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Lakes Drying by 2046? 🚨 What the New Master Plan Reveals!

📅 வெளியீடு நாள்: 30-09-2025

📄 விளக்கம்

The Hosur New Town Development Plan 2046 makes a shocking revelation:

🏞️ 5 major lakes within Hosur Corporation limits may completely dry up

💧 Ramnayakkan Lake, Anthivadi Lake & Santhapuram Lake already listed as "no water holding"

🌊 Chandramkudi & Basthi Lakes — half dried, future uncertain

🏗️ Only way to save them? Treat sewage & pump into lakes

👉 Volunteers and citizens are questioning: Is this a master plan for development or a roadmap to destroy Hosur’s natural water heritage?

⚠️ Time to act before it’s too late!

#Hosur #SaveHosurLakes #WaterCrisis #HosurDevelopment #HosurOnline #EnvironmentalAwareness #HosurMasterPlan2046

ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஐந்து ஏரிகள், கழிவு நீர் தொட்டி கட்டினால் மட்டுமே பயன்படும் என, ஓசூர் புது நகர் வளர்ச்சி திட்டம் 2046 ஆம் ஆண்டு திட்டவட்டமாக எடுத்துரைக்கிறது. எதையும் நமக்கு புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும். 2046 ஆம் ஆண்டுக்குள், இந்த ஏரிகளை முழுமையாக வறண்ட நிலைக்கு தள்ளப் போகிறார்களா?, தங்களது திட்டத்தின் மைண்டு வாய்ஸை வெளிப்படையாக கூவி விட்டார்களா? நமக்கு ஒரே கொளப்ரேஷனா இருக்கு!.

2022 ஆம் ஆண்டு கையொப்பமிட்ட ஓசூர் புது நகர் வளர்ச்சி திட்டம் வரைவு இணையத்தில் கிடைக்கிறது. அதில் H N T D A உறுப்பினர் செயலாளர், நகர் மற்றும் ஊர் புற வளர்ச்சி திட்ட இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதில் 79 ஆவது பக்கத்தில், ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம் ஐந்து பெரிய ஏரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், ராமநாயக்கன் ஏரி, அந்திவாடி ஏரி, சாந்தபுரம் ஏரி ஆகியவை முழுமையாக காய்ந்து விட்டனவாம். அதில் இனி தண்ணீர் நரம்புவதற்கு வாய்ப்பில்லை என்பது இதன் பொருள்.

சந்திரம்குடி ஏரி மற்றும் பஸ்தி ஏரி ஆகியவை, பாதி வறண்டு விட்டனவாம். அதாவது, இனி அவற்றில் தண்ணீர் முழுமையாக தேங்க வாய்ப்பு இல்லை.

அதனால் இந்த ஏரிகளை உயிர்பிக்க வேண்டுமானால், அவற்றில் கழிவுநீர் தூய்மைப்படுத்தும் நிலையம் அமைத்து, நீரை பாய்ச்சினால் மட்டுமே, ஓசூரில் நிலத்தடி நீர் உயரும்.

இப்படி ஓசூரின் எல்லா கழிவு நீரையும், இந்த ஐந்து ஏரிகளில் தூய்மைப்படுத்தி பாய்ச்சி, ஏரிகள் ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பதற்கு ஓசூர் புது நகர் வளர்ச்சி திட்டம் 2046 வழிவகைகள் ஏற்படுத்துகிறது.

தன்னார்வலர்களும் பொதுமக்களும், இந்த பெரிய ஏரிகள், விரைவாக வறண்டு போவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads