Shocking Hosur Theft 😲 22 Sovereigns Stolen by a Close Friend! | Hosur News Update - Video
Shocking Hosur Theft 😲 22 Sovereigns Stolen by a Close Friend!
📅 வெளியீடு நாள்: 01-10-2025
📄 விளக்கம்
A 53-year-old woman in Hosur lost 22 sovereigns of gold jewelry in a shocking theft.
👉 The accused? Her own 52-year-old neighbor and close friend, who used her trust to commit the crime.
👉 Hosur Police acted swiftly and recovered the jewelry.
This case reminds us: Sometimes danger comes from those closest to us.
🔔 Stay tuned to HosurOnline for more local updates.
#Hosur #HosurNews #TamilNadu #CrimeNews #BreakingNews #HosurOnline #TamilNews
ஓசூரில் 52 வயது, 53 வயது வீட்டில், இருபத்தி இரண்டு பவுன் நகை திருடியது எப்படி?. சென்னத்தூரைச் சேர்ந்த 53 வயது மஞ்சுளா என்பவர், தனது வீட்டில் சுமார் 22 பவுன் நகை வைத்திருந்தாராம். நகையை காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து நகையை மீட்டனர்.
மஞ்சுளாவின் நெருங்கிய தோழி 52 வயதுடைய, பார்வதம்மாள். இவர் மாற்றுத் திறனாளி மற்றும் திருமணம் ஆகாதவர். இருவரும் அருகருகே குடியிருந்து வந்துள்ளனர்.
மஞ்சுளாவிடம் நன்றாக பழகிய பார்வதம்மாள், மஞ்சுளா குளிக்கும் போதும் சமையலறையில் வேலை செய்யும் பொழுதும் அதை வாய்ப்பாக பயன்படுத்தி, 22 பவுன் நகையையும் திருடி எடுத்துச் சென்றுள்ளார்.
பார்வதம்மாளை கைது செய்த காவல்துறையினர் நகையை மீட்டு உள்ளனர்.