Hosur Development Plan 🚧 | Rs 1025 Crore Projects Announced! | Hosur News Update - Video
Hosur Development Plan 🚧 | Rs 1025 Crore Projects Announced!
📅 வெளியீடு நாள்: 02-10-2025
📄 விளக்கம்
💰 Big boost for Hosur!
✔️ Rs 1025 Cr allocated for 3-phase development.
✔️ Flood prevention, new parks & lake restoration.
✔️ Hosur set for major urban transformation!
🔔 Subscribe to HosurOnline for the latest updates on Hosur’s growth.
#HosurDevelopment #HosurNews #TamilNadu #UrbanDevelopment #HosurOnline #BreakingNews
ஓசூர் மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு 1025 கோடி ரூபாய்!. மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் குறித்து செயல்பாட்டு பங்குதாரர்களுக்கான கூட்டம் கடந்த நாள், ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர மேயர், மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர் ரவி. T N U I F S L அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துறை அலுவலர்கள், மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், Voyants Solution கலந்தாலோசகர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக, கடந்த ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகள் 14 அடையாளப்படுத்தப்பட்டு, சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மழை நீர் வடிகால் ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கும், மூன்று நிலை நீர் நிலைகளை மேம்படுத்தி, அப்பகுதிகளில் மூன்று பூங்காக்கள் அமைப்பதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இரண்டாம் கட்டமாக 707 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 நீர் நிலைகளும் 12 இடங்களில் புதிதாக பூங்க அமைப்பதற்கும் திட்டம் வகுப்பு வகுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக மேலும் ஆறு நீர் நிலைகளை மேம்படுத்தி இரண்டு இடங்களில் புதிதாக பூங்காக்கள் அமைப்பது என்றும், இதற்கு 193 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.