3,500-Year-Old Mystery of Hosur! 🗿 Hosur, Scotland & Meghalaya Connection | Hosur News Update - Video
3,500-Year-Old Mystery of Hosur! 🗿 Hosur, Scotland & Meghalaya Connection
📅 வெளியீடு நாள்: 03-10-2025
📄 விளக்கம்
🔎 Did you know? Hosur has a 3,500-year-old history hidden in plain sight!
At Mallachandiram near Shoolagiri, over 250 Megalithic burial monuments lie scattered across rocky hills.
👉 What’s shocking?
✔️ The burial practices of Hosur’s ancient people match those in Scotland & Meghalaya.
✔️ Tamil culture’s deep-rooted ancestor worship & stone memorials.
✔️ A reminder of Hosur’s place in global history.
Take your kids & explore this forgotten treasure! 🏞️
#Hosur #AncientHistory #TamilCulture #Archaeology #Megalithic #Scotland #Meghalaya #Heritage #TamilNaduHistory #HosurOnline
3500 ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பகுதிகளில் வாழ்ந்த, மக்கள் எப்படி இருந்தனர்? ஓசூருக்கும், மேகாலயாவிற்கும், ஸ்காட்லாந்திற்கும் இருந்த ஒற்றுமை என்ன? 3500 ஆண்டுகளுக்கு முன், ஒரே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில், கல் ஊழி மனிதர்களால் எவ்வாறு சிந்தித்து செயல்பட இயன்றது?
தமிழர்களின் பண்பாட்டில் அடிப்படையான ஒன்று இறந்தோருக்கான கல்லறைகளை, குத்துக்கல், கற்திட்டை, கற்பதுக்கைகள், பரல் உயர் பதுக்கைகள், வட்ட புதிர் கல் என பல்வேறு வடிவங்களில் அமைக்கும் வழக்கம் மற்றும் மூதாதையர் வழிபாடு.
சூளகிரி வட்டத்தில், மேலுமலையிலிருந்து கிழக்கு நோக்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், மல்லசந்திரம் ஊர் அமைந்துள்ளது.
மல்லச்சந்திரம் ஊரின் அருகே, மொரல் பாறைகளைக் கொண்ட குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு குன்றுகளின் மீது, சுமார் 250 க்கும் மேற்பட்ட பெருங்கற்திட்டை வகையைச் சார்ந்த கல் ஊழி மனிதர்களின் சுவடுகள்.
ஓசூரில் 3500 ஆண்டுகள் பழமை கொண்ட வரலாறு, கேட்பாரற்று சிதறி கிடைக்கிறது. ஒரு நாள் உங்கள் குழந்தைகளுடன் இங்கு சென்று வாருங்களேன்.