🌧️ Hosur Drenched! 130 mm Rain in One Night | Heavy Rain Alert | Hosur News Update - Video
🌧️ Hosur Drenched! 130 mm Rain in One Night | Heavy Rain Alert
📅 வெளியீடு நாள்: 04-10-2025
📄 விளக்கம்
Hosur witnessed an unprecedented downpour of 130 mm rainfall in a single night on October 3rd.
⚡ Evening showers quickly turned into a torrential downpour, flooding low-lying areas of the city.
🏠 In Terpet, water even entered some houses, creating panic among residents.
🌧️ With continuous heavy rains, Hosur residents in low-lying areas are facing major challenges.
Stay updated with Hosur weather & local news at HosurOnline.com.
#HosurRain #HosurWeather #HeavyRain #HosurFloods #BreakingNews #TamilNaduWeather
ஓசூரில் ஒரே இரவில் 130 மில்லி மீட்டர் அளவிற்கு கொட்டி தீர்த்த மழை. அக்டோபர் மூன்றாம் நாள், பகலில் நன்றாக வெயில் காய்ச்சியது. மாலையில் அலசலான மேகங்களுடன் துவங்கிய சாரல் மழை, மாலை ஆறேகால் மணி அளவில், மணிக்கு 58 மில்லி மீட்டர் மழை என்ற அளவில், பெரும் மழையாக கொட்ட துவங்கியது.
இதனால், ஓசூர் நகரின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. குறிப்பாக, தேர்பேட்டையில் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக தகவல்கள் கிடைக்கிறது.
மழை விட்டுவிடும் என்று கருதிய நிலையில், இரவு சுமார் பன்னிரெண்டே முக்கால் மணியளவில், மணிக்கு 84 மில்லி மீட்டர் என்ற அளவில் பேய் மழை சற்று நேரம் கொட்டியது.
தாழ்வான பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களை, ஓசூரில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழை அச்சுறுத்தி வருகிறது.