Three eyes of the coconut, three eyes of Shiva — devotion unites the people of Hosur! | Hosur News Update - Video
Three eyes of the coconut, three eyes of Shiva — devotion unites the people of Hosur!
📅 வெளியீடு நாள்: 06-10-2025
📄 விளக்கம்
In the serene village of Maniyampadi near Denkanikottai, thousands of devotees came together to celebrate a divine tradition 🌸
✨ Every year, during Dasara, villagers from 15 nearby villages perform a sacred coconut-breaking ritual — offering coconuts to Lord Shiva as a symbol of surrender and purification.
🌴 The coconut, with its three eyes, is seen as the reflection of Lord Shiva’s third eye — symbolizing wisdom, destruction of evil, and divine awakening.
Devotees broke coconuts on their heads in devotion, danced in divine ecstasy, and carried idols on their shoulders — offering prayers for good harvest and wellbeing. 🌾
தேங்காய்க்கு மூன்று கண்கள். தென்னாடு போற்றும் சிவனுக்கும் மூன்று கண்கள். ஓசூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேன்கனிக்கோட்டை அருகே 15 ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து, சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி ஊரில் உழவு செழிக்க, மக்கள் நோய் நொடி இன்றி வாழ ஒவ்வொரு ஆண்டும் தசராவை ஒட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு இவ்வூர் திருவிழாவின் சிறப்பாக கருதப்படுகிறது.
தேங்காய்க்கு மூன்று கண்கள் இருக்கும். தேங்காயை சிவனின் அடையாளமாக மக்கள் போற்றுகிறார்கள். அதனால் சிவனின் அடையாளமாக விளங்கும் தேங்காயை தலையில் உடைப்பது, சிவனை தங்கள் தலையில் ஏற்றுக் கொள்வதாக மக்களின் நம்பிக்கை.
ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, அம்பு விட்டு, தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் சாமி சிலைகளை பக்தர்கள் தலைமேல் தூக்கி வைத்து நடனம் ஆடினர்.
மணியம்பாடி, மேலூர் மற்றும் ஒற்றர்பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் மேற்கொண்டனர்.