Are Hosur Private Hospitals Really Safer? | Hosur News Update - Video
Are Hosur Private Hospitals Really Safer?
📅 வெளியீடு நாள்: 09-10-2025
📄 விளக்கம்
Doctor prescribed diabetes medicine instead of headache pills?
A recent case at Krishnagiri Medical College Hospital sparked debate — a doctor allegedly prescribed diabetes medicine instead of headache pills.
But is blaming doctors the real solution? 🤔
👉 How patients explain their symptoms matters too.
👉 Private hospitals aren’t error-free either.
👉 No doctor deliberately prescribes wrong medication.
This is not about blaming — it’s about understanding and awareness. Stay informed. Stay safe. 💊
#HosurOnline #Krishnagiri #DoctorAwareness #MedicalFacts #HealthcareIndia #RespectDoctors #PatientSafety #TamilNews #HealthTalks #MedicalEthics
ஓசூர் தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்பானதா? கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு தலைவலி மருந்துக்கு பதிலாக நீரழிவு பாதிப்புக்கான மருந்தை மருத்துவர் பரிந்துரைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சரியாக பணியாற்றுவது இல்லை என்றால், தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுகுவது தான் சரியான தீர்வா?
நோயாளி நோயின் அறிகுறி குறித்து மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதிலளித்தார் என்பதை பொறுத்தே மருத்துவர் மருந்து் பரிந்துரைக்கிறார். தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் தவறு செய்ததாக ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. உலகளாவிய அளவில் ஏற்படும் மனித தவறுகள் தான் இவை. எந்த மருத்துவரும் எந்த நோயாளிக்கும் தவறான மருந்து பரிந்துரைக்க வேண்டும் என தெரிந்து செய்ய மாட்டார்.
புரியாத எழுத்தில் எழுதப்பட்ட மருந்தை, புரிந்ததாக கருதி மருந்தகத்தில் மருந்து வழங்குகிறார்கள். மருத்துவர் பரிந்துரைத்த மருந்தைத்தான் மருந்தகத்தில் வழங்கினார்கள் என்பதற்கு என்ன உறுதி?.
ஆகவே, எந்த பொருளை, எந்த சேவையை யாரிடம் இருந்து பெற்றாலும், அதை ஆராய்ந்து பயன்படுத்துவோம். அதுவே நமக்கு பாதுகாப்பு.