Where Did the Elephant Fund Go? | Hosur Farmers Demand Justice | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Where Did the Elephant Fund Go? | Hosur Farmers Demand Justice

📅 வெளியீடு நாள்: 09-10-2025

📄 விளக்கம்

Farmers near Hosur and Denkanikottai have raised a shocking question —
Tamil Nadu Govt allocates crores for elephant food and water, yet the animals end up raiding farmlands! 🌾🐘

👉 ₹1 lakh spent per acre on tomato crops — only ₹6,000 given as compensation.
👉 Farmers say: “We’re not against elephants, we’re against negligence!”
👉 Activists demand a white paper on how the elephant welfare funds are spent.

This is not about wildlife vs humans — it’s about accountability and fairness.

#HosurOnline #ElephantRaid #TamilNadu #FarmersVoice #WildlifeProtection #Denkanikottai #ElephantAttack #TNForestDepartment #Accountability #SaveFarmers #HosurNews #TamilNews

ஓசூர் வனப்பகுதியில் வாழும் யானைகளுக்கு, அவற்றின் வாழ்விடப் பகுதிகளில் அவற்றுக்கான உணவு மற்றும் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தருவதற்கு தமிழ்நாடு அரசு ஏராளமான நிதி ஒதுக்கினாலும், அவை முறையாக வனவிலங்குகளுக்காக சென்றடைவது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

ஒதுக்கிய பணத்தில், காட்டுப் பகுதியில் முறையாக உணவு ஏற்பாடு செய்து தராத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வலசை வரும் யானைகள் உணவு தேடி விளைநிலங்களுக்குள் புகுந்து, விளை பொருட்களை உட்கொள்வதுடன் தோட்டங்களையும் சீரழித்து சென்று விடுகின்றன.

ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி தோட்டம் அமைக்கின்றனர். யானைகளால் சீரழிக்கப்படும் தோட்டங்களுக்கு, வெறும் 6000 ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது.

பாதிப்படைந்த உழவர்கள் கடந்த நாள் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாங்கள் வனவிலங்குகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவை விருப்பம் போல் எமது நிலத்தில் வந்து விளை பொருட்களை உட்கொண்டு செல்லட்டும். அவற்றை முறையாக வனப் பகுதியில் உணவு வழங்கி பாதுகாக்க தவறியது அரசின் குற்றம். ஆகவே நாங்கள் செலவு செய்த பணத்தை முறையாக எங்களுக்கு கொடுத்து விடுங்கள். பேச்சுவார்த்தை முடியும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தினர்.

வன விலங்குகளுக்கு ஒதுக்கும் பணம் குறித்தும், எவ்வாறு அந்தப் பணம் செலவிடப்படுகிறது என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு உடனே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தன்னார்வலர் ஒருவர் ஓசூர் ஆன்லைன் இடம் கோரிக்கை வைத்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads