North Indian GangsRobbery Attempt in Bargur! Elderly Guard Fights Back A | CCTV Reveals Truth | Hosur News Update - Video
North Indian GangsRobbery Attempt in Bargur! Elderly Guard Fights Back A | CCTV Reveals Truth
📅 வெளியீடு நாள்: 10-10-2025
📄 விளக்கம்
🚨 North Indian robbery gang on the run!
A shocking incident has come to light from Bargur, Krishnagiri District, where a six-member gang attacked an elderly night watchman at a hardware shop.
The guard, posted outside Shree Krishna Hardwares, was suddenly grabbed and nearly strangled — but his loud cries for help alerted neighbors, forcing the gang to flee.
📹 CCTV footage now confirms the North Indian gang’s involvement, and police have launched a manhunt.
⚠️ Residents and shop owners in Hosur and Krishnagiri are urged to stay alert, especially during cold and rainy nights.
#KrishnagiriNews #BargurCrime #HosurOnline #Hosur #Krishnagiri #TamilNaduNews #RobberyAlert #CCTVFootage #NightPatrol #CrimeWatch #BreakingNews #SafetyAlert
வட மாநில கொள்ளையர்கள் அட்டகாசம். வயது முதிர்ந்த காவலாளியை தாக்கி மூச்சுத் திணறடித்த கொள்ளையர்கள். கூச்சலிட்டு உயிர் தப்பிய காவலாளி. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் Shree கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் என்கிற கடை செயல்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் காவலுக்கு முதியவர் ஒருவர், கடை வாசலில் நாற்காலியில் அமர்ந்து கண்காணிப்பது வழக்கம். கடந்த ஒன்பதாம் நாள் இரவும் வழக்கம் போல் காவலுக்கு இருந்தவர் கண் அயர்ந்து உள்ளார். இந்த நேரத்தில் ஆறு பேர் கொண்ட வடமாநில கும்பல், முதியவரை கையைப் பிடித்து வைத்து கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரள்வதை கண்டு, கொள்ளை கும்பல் நிகழ்விடத்தில் இருந்து தப்பி சென்றது.
கடை உரிமையாளர் பிரகாஷ் என்பவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, வடமாநில கும்பல் வெறியாட்டம் ஆடியது கண்டறியப்பட்டது.
ஓசூரை பொறுத்தவரை குளிர் மற்றும் மழை தொடர்வதால், கடை மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.