Hosur Flood Alert! 🌧️ 95% of Lakes Overflow in Krishnagiri — Residents Warned to Stay Safe! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Flood Alert! 🌧️ 95% of Lakes Overflow in Krishnagiri — Residents Warned to Stay Safe!

📅 வெளியீடு நாள்: 11-10-2025

📄 விளக்கம்

🚨 Breaking Weather Update from Hosur & Krishnagiri!
Continuous heavy rains over the past few days have filled 95% of the district’s lakes to capacity, leading to localized flooding in several low-lying areas. 🌊

⚠️ Residents are advised to stay alert as water levels continue to rise.
🙏 Meanwhile, villagers in Denkanikottai and Agalakottai have offered thanksgiving prayers for the overflowing lakes — a sight not seen in 4 years!

However, poor drainage and delayed highway maintenance have caused severe traffic disruptions on the Hosur–Krishnagiri National Highway.

Stay tuned to HosurOnline for real-time updates.

#BreakingNews #Hosur #Krishnagiri #HosurOnline #FloodAlert #TamilNaduRain #WeatherUpdate #HeavyRain #TamilNaduNews #HosurFlood #RainNews #Denkanikottai #Agalakottai

இந்த ஆண்டு ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பொழிந்து வருகிறது. பல நாட்கள் மழையின் வேகம், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைக் காட்டிலும் கூடுதலாக இருந்ததால், ஆங்காங்கே ஏற்கனவே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் தண்ணீரினால் சூழப்பட்டன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 95 விழுக்காடு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக கூறப்படுகிறது. தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உழவு செழித்து வழங்கும் பகுதிகளில் மக்கள் ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்வதை தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டை சேசையன் ஏரி நான்கு ஆண்டுகள் கழித்து நிரம்பியதை தொடர்ந்து, கடந்த நாள் நன்றி செலுத்தும் விதமாக வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஓசூர் கிருஷ்ணகிரி இடையே தேசிய நெடுஞ்சாலையை முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேம்படுத்தாததால், நெடுஞ்சாலை வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads