Two Young Engineers Die in Hosur — A Tragedy Caused by NHAI Negligence? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Two Young Engineers Die in Hosur — A Tragedy Caused by NHAI Negligence?

📅 வெளியீடு நாள்: 14-10-2025

📄 விளக்கம்

A shocking tragedy in Hosur — two young engineers from Kerala, working with Tata Electronics, lost their lives after falling from an unfinished flyover near Hosur's Zuzuvadi on the National Highway.

Reports suggest there were no warning signs or barricades, despite ongoing work by the National Highways Authority of India (NHAI).

Locals and volunteers demand accountability — how many more lives before safety measures are taken seriously?

#Hosur #BreakingNews #HighwayAccident #NH44 #HosurNews #RoadSafety #NHAI #InfrastructureIndia #TataElectronics #KeralaEngineers #HosurOnline

ஓசூரில் மீண்டும் இரண்டு உயிர்கள் தேசிய நெடுஞ்சாலை சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளன. இந்த துன்ப நிகழ்வுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பட்டதாரி பொறியாளர்கள். ஓசூரில் TATA எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி இருசக்கர வண்டியில் பயணம் செய்தபோது, சூசூவாடி மேம்பாலப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், அதை முறையாக தடுப்புகள் வைத்து மூடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை அல்லது தடுப்பு வேலி இல்லாததால், பாலப் பணிகள் நிறைவடைந்ததாக கருதி, அப்பாவி இளைஞர்கள், பாலத்தில் பயணித்து, 30 அடி பள்ளத்தில் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் உடனடியாக இதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடையே கடும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads