🌸 Hosur Welcomes CM’s New Welfare Scheme for Working Women | Tamil Nadu Leads Again! | Hosur News Update - Video
🌸 Hosur Welcomes CM’s New Welfare Scheme for Working Women | Tamil Nadu Leads Again!
📅 வெளியீடு நாள்: 16-10-2025
📄 விளக்கம்
Tamil Nadu continues to empower working women! 💪
Chief Minister M.K. Stalin’s new Child Care Centre Scheme has now been launched at Hosur SIPCOT, supporting women working in industries.
Along with free bus travel and hostel facilities (Thozhi Hostels), the new initiative allows working mothers to safely leave their children (below 6 years) at these care centers — managed by FICCI’s Ladies Organisation.
A big step toward gender equality and workplace inclusion! 🌸
#Hosur #WomenEmpowerment #TamilNadu #CMStalin #HosurNews #SIPCOT #FICCI #WelfareScheme #WorkingWomen #ThozhiHostel #ChildCareCentre #HosurOnline #SocialImpact #tamilnews
ஓசூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெண்களுக்கான நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அளவில், தொழிற்சாலை வேலைக்குச் செல்லும் பெண்களில், 43 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு கட்டணம் இல்லா விடியல் பேருந்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்குவதற்காக தோழி விடுதி போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கண்காணித்துக்கொள்ள குழந்தைகள் காப்பகம் ஓசூர் சிப்காட் உட்பட தமிழ்நாட்டின் 16 சிப்காட்டுகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் காப்பகங்களை Federation of Indian Chambers of Commerce and Industry’s Ladies Organisation தனது பொறுப்பில் ஏற்று நடத்தும்.
இந்த காப்பகங்களில் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்குச் செல்லும் பெண்கள் விட்டுச் செல்லலாம். குழந்தைகளுக்கு உணவு மற்றும் அடிப்படை கல்வி பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.