The Forgotten Heroine of Hosur | The True Story of “Osur Naayagi” & Her Eternal Love for Lord Shiva | Hosur News Update - Video
The Forgotten Heroine of Hosur | The True Story of “Osur Naayagi” & Her Eternal Love for Lord Shiva
📅 வெளியீடு நாள்: 20-10-2025
📄 விளக்கம்
Hidden in the heart of Hosur, near the Pachai Kulam, lies an ancient legend — the story of “Osur Naayagi”, a royal woman whose undying devotion to Lord Shiva transcended life itself.
While Andal of Srivilliputhur united with Lord Vishnu in divine love, this Hosur heroine offered her own head to Lord Shiva — an act of complete surrender and eternal union.
Archaeologists believe her memorial stone (Nadukal) dates back over 700 years, depicting her royal ornaments and divine grace — evidence that she once ruled as a queen.
This rare depiction of a woman self-sacrificing to Shiva is found only in Hosur.
📜 Join us as we rediscover the untold history buried beneath the soils of Tamil Nadu — a tale of faith, love, and devotion that time almost forgot.
"ஓசூர் நாயகி", மலைமீது வீற்றிருக்கும் சிவனின் மீது தீராக்காதலை கொண்டிருந்த ஓசூரின் வரலாற்று நாயகி! ஆண்டாள், வில்லிபுத்தூரில் பெருமாளின் மீது தீரா காதல் கொண்டு ஐக்கியமானவள். இந்த ஓசூர் நாயகி தன் தலையைத் தானே ஈந்து, ஈசனுக்கு படைத்து, ஈசனுடன் ஐக்கியமானவள்.
ஓசூர் பச்சை குளம் அருகே, சாலை ஓரத்தில் தகரக் கொட்டாயில் கேட்பாரற்று கிடக்கும் ஈசனுடன் ஐக்கியமாக தன்னுயிர் ஈந்த இந்த நாயகியின் வரலாறு, எங்கோ ஓர் இடத்தில் இதே ஓசூரில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.
வரலாற்றில் இவளுக்கு நடுக்கல் வைத்திருந்தாலும், அதன் பின் வந்த அவளின் தலைமுறைகள் அவளின் ஈசன் மீதான ஈர்ப்பை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால், ஒரு ஆண்டாளாக மக்கள் மனதில் இடம்பெறாமல் போய்விட்டாளோ?
குறைந்தது, 700 ஆண்டுகளுக்கும் மேலாக, இவள் நடுக்கல்லாய் வீற்றிருக்க வேண்டும் என்று தொல்லியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிலையில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்களையும், பனி பெண்களும் பணி அமர்த்தப்பட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, இவள் அரச குலத்தில் வழிவந்தவளாக இருந்திருக்க வேண்டும். அவள் அரசியாக அரியணையில் அமர்ந்திருக்கும், செல்வச் செழிப்பு காட்டும் விதமாக அவளுக்கான நடுக்கல் செதுக்கப்பட்டுள்ளது.
அதே நடு அடுக்கில், வலது புறமாக, அவள் தன் பிடரி கழுத்தின் மீது தானே வாழுடன் நிற்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் இப்படி தங்கள் தலையை தாங்களே ஈசனுக்கு கொய்து காணிக்கையானதாக அத்திமுகம் உள்ளிட்ட சில சிவன் கோவில்களில் நம்மால் காண இயல்கிறது. பெண் ஒருத்தி இவ்வாறு தன்னையே அர்ப்பணித்த காட்சி இங்கு மட்டுமே உள்ளது.








