Zuzuvadi Families Donate Land for Public Drainage | Hosur’s Unsung Heroes | Hosur News Update - Video
Zuzuvadi Families Donate Land for Public Drainage | Hosur’s Unsung Heroes
📅 வெளியீடு நாள்: 28-11-2025
📄 விளக்கம்
A 20-year drainage issue affecting over 300 families in Senthil Nagar has finally been resolved thanks to the generosity of three Zuzuvadi families — Narasimmappa, Sivaraj, and Nagappa.
They voluntarily donated lakhs worth of patta land to build the essential drainage channel. Their quiet act of humanity stands as a powerful example of community-driven development.
ஓசூரில் விளம்பரமின்றி, ஓசையின்றி, சமுதாயத்திற்கு நன்மை செய்து வாழும் போற்றி புகழப்பட வேண்டிய ஹீரோக்கள்... பத்து ரூபாய்க்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் கூட அதை புகைப்படம் எடுத்து, கைபேசியின் ஸ்டேட்டஸில் வைத்து, சமூக வலைதளங்களில் பரப்பி வரும் விளம்பர விரும்பிகள் வாழும் இந்த ஊழியில், பல லட்சம் மதிப்பிலான நிலத்தை, பொதுநலன் கருதி விட்டுக் கொடுத்த சூசூவாடி சேர்ந்த மூன்று குடும்பங்கள். சூசூவாடி பகுதியில், முறையான வடிகால் ஓடை வசதி இல்லாமல் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செந்தில் நகர் பகுதியில் வீடுகளை கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கழிவு நீரை தெருக்களில் ஓட விட்டு நோய்களை பரப்பி வந்தனர். இதற்கு ஒரே தீர்வு, பட்டா நிலம் வழியாக கழிவு நீர் ஓடையை எடுத்துச் செல்வது. நிலைமையை புரிந்து கொண்ட சூசூவாடியைச் சேர்ந்த நரசிம்மப்பா - சிவராஜ் - நாகப்பா - ஆகிய மூன்று குடும்பத்தினர், தங்களின் நிலமொழியாக ஓடையை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, கழிவுநீர் வடிகாலுக்கு தீர்வு எட்டப்பட்டது. இந்த மூவரின் செயலை பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது. comment section-னில் உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.








