Hosur Farmers Face Heavy Losses as Vegetable Prices Crash to ₹4–₹5 Per Kilo | Hosur News Update - Video
Hosur Farmers Face Heavy Losses as Vegetable Prices Crash to ₹4–₹5 Per Kilo
📅 வெளியீடு நாள்: 28-02-2026
📄 விளக்கம்
Farmers in the Hosur region cultivating tomato, cauliflower, cabbage and potato are experiencing significant financial stress due to a sharp decline in market prices.
Procurement rates have reportedly fallen to ₹4–₹5 per kilo, leaving many unable to recover their estimated investment of around ₹1 lakh spent on cultivation, labour and inputs.
Farmers from Akkondapalli have urged the government to establish cold storage facilities and support value-addition measures to help stabilize incomes during price fluctuations.
The situation highlights the need for stronger agricultural market infrastructure in the region.
ஓசூர் பகுதி உழவர்களுக்கு தொடரும் பேரடி. முதலீடு செய்தது ஒரு லட்சம் ரூபாயும், உடல் உழைப்பும், நேரமும். ஆனால் கிடைக்கப் போவது என்னவோ வெறும் இருபதாயிரம் ரூபாய்!. வேதனையில் தவிக்கும் ஓசூர் உழவர்களுக்கு உதவுமா அரசு?
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, பூக்கோசு என்கிற காலிபிளவர், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு என ஏராளமான காய்கறி பயிர்களை உழவர்கள் விளைவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தக்காளி, பூக்கோசு, முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து கிலோ ரூபாய் 4 அல்லது 5 என்ற விலையில் உள்ளது.
இத்தகைய விலை வீழ்ச்சி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், உழவர் பெருமக்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கொண்டபள்ளியை சேர்ந்த உழவர் சதானந்தா மற்றும் கோபால் ஆகியோர் ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறிய போது, "ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகளை சேமித்து வைக்க, அரசு சார்பில் குளிர்விப்பு கிடங்குகள் அமைத்து தர வேண்டும், மற்றும் மதிப்பு கூட்டி விற்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.








