Elephant Attack Victim Near Hosur Shifted to Private Hospital, Family Raises Concerns | Hosur News Update - Video
Elephant Attack Victim Near Hosur Shifted to Private Hospital, Family Raises Concerns
📅 வெளியீடு நாள்: 09-03-2026
📄 விளக்கம்
A man who was reportedly injured in a wild elephant attack near Kamantotti in the Hosur region has been admitted to a private hospital after his family said adequate treatment facilities were unavailable locally.
The incident is said to have occurred around 10:30 PM when the victim stepped outside his house and encountered a wild elephant.
Family members initially took him to the Hosur Government Headquarters Hospital and were advised to shift him to the Krishnagiri Government Medical College Hospital. Due to the urgency of the situation, he was later admitted to a private hospital on Denkanikottai Road.
The family has also said that early warning alerts about elephant movement from forest authorities could help residents remain cautious in such forest-edge areas.
ஓசூர் சுற்றுவட்டாரத்தில் யானைகள் தாக்கி படுகாயம் அடைந்தோருக்கு, முறையான மருத்துவம் வழங்க வசதிகள் இல்லை என, ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை தட்டிக் கழிப்பதாக குற்றச்சாட்டு.
கடந்த நாள் காமன்தொட்டி அருகே, இரவு பத்தரை மணி அளவில் தமது வீட்டை விட்டு வெளியில் வந்தவரை இருட்டில் நின்ற காட்டு யானை இடுப்பு பகுதியில் மிதித்துள்ளது.
உடனடியாக கூச்சலிட்டு, அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்தவர்கள், மருத்துவமனையில் வசதிகள் இல்லை எனவும், உடனடியாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். வேறு வழியின்றி, தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பாதிப்படைந்தவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"வனத்துறையினர் யானை குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தால், எச்சரிக்கையுடன் இருந்திருப்போம். ஏழ்மை நிலையில் உழவுத் தொழிலை சார்ந்து வாழும் எங்களுக்கு தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும் நிலை என்பது பெருத்த பொருளாதார சுமை" என பாதிப்படைந்தவரின் குடும்பத்தினர் ஓசூர் ஆன்லைன் இடம் தெரிவித்தனர்.








