Hosur Shocking Night Incident 🐘🍅 Heartbreaking story from Averipalli village! #hosurupdates #hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Shocking Night Incident 🐘🍅 Heartbreaking story from Averipalli village! #hosurupdates #hosur

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Farmer Umapathi carefully packed 2,500 kg of tomatoes in 150 crates, worth around ₹1.5 lakh, to sell at the Hosur market. The Mahindra pickup truck was loaded and parked in front of his home overnight.

But before sunrise, an elephant raided the spot, destroyed the vehicle, and crushed the entire tomato consignment, leaving the farmer devastated.

🌾 In a small village with just 50 houses, this loss is crippling. Umapathi is now seeking government compensation for the destroyed produce and damaged vehicle.

🎥 Watch this real-life tragedy caused by human-wildlife conflict.

Let’s raise awareness for farmers and protect their livelihoods.

தளி ஒன்றியம், ஆவேரிபள்ளி என்னும் ஊரைச் சேர்ந்தவர், உமாபதி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த இரண்டாயிரத்து ஐநூறு கிலோ தக்காளியை, நூற்றி ஐம்பது கிரேட்டுகளில், கடந்த நாள் மாலையில் அடுக்கி, ஓசூர் சந்தைக்கு, இன்று வியாழக்கிழமை காலை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருந்துள்ளார்.

ஆவேரிபள்ளி ஊரில், சுமார் ஐம்பது வீடுகள் இருப்பதாகவும், தளியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அவ்வூர் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தக்காளிகளை ஏற்றி செல்வதற்கு மகேந்திரா பிக்கப் வண்டியை ஏற்பாடு செய்து, கடந்த நாள் மாலை 8 மணி அளவில் அதில் தக்காளி முழுவதையும் ஏற்றி, தனது வீட்டு வாசலில் நிறுத்தியுள்ளார். எல்லா வேலைகளையும் முடித்து அயர்ந்து தூங்கியவர், இன்று காலையில், தக்காளியை ஓசூர் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக கிளம்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஏற்றி வைத்திருந்த தக்காளி மற்றும் அவரது மகேந்திரா பிக்கப் வண்டியை, இரவோடு இரவாக யானை ஒன்று, அடித்து உடைத்து துவம்சம் செய்து, வீணடித்துச் சென்றுள்ளது.

இன்றைய சந்தை விலையில் தக்காளி ஒரு கிரேட் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும், யானையால் வீணடிக்கப்பட்ட தக்காளியின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் எனவும், மேலும் தமது கிரேட் மற்றும் பிக்கப் வண்டி ஆகியவை முழுமையாக சேதமடைந்துள்ளது எனவும், அரசு முறையான இழப்பீடு தமக்கு தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads