Allegations Raised Over Non-Operational Bike Ambulances in Hosur Hill Areas | Hosur News Update - Video
Allegations Raised Over Non-Operational Bike Ambulances in Hosur Hill Areas
📅 வெளியீடு நாள்: 17-04-2026
📄 விளக்கம்
Concerns have been raised regarding the functioning of two-wheeler ambulance services intended for hill communities near Anchetty in the Hosur region.
Volunteers allege that the ambulances are not operational on the ground and are only being recorded as active in official logs.
The vehicles, reportedly meant for the Urigam–Manjukondapalli area, are said to be stationed at the Denkanikottai Government Hospital instead.
Residents and activists have called for immediate intervention to ensure the services reach the intended beneficiaries.
மலைவாழ் மக்களுக்கான ஆம்புலன்ஸ்… காகிதத்தில் மட்டும் செயல்படும் விந்தை?.
ஓசூர் அடுத்த அஞ்செட்டி பகுதி மலைவாழ் மக்களுக்காக வழங்கப்பட்ட இருசக்கர பைக் ஆம்புலன்ஸ் வண்டிகள், செயல்பாட்டில் இல்லாமல்,
பதிவேட்டில் மட்டும் ஓடுகின்றன என்று தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் மலைப்பகுதி மக்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொண்டுவரப்பட்டது இந்த திட்டம்.
உரிகம் பகுதிக்கு வழங்கப்பட்ட இரண்டு வண்டிகள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு, கணக்குக்கு மட்டும் தேன்கனிக்கோட்டை நகர் பகுதியில் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த இரண்டு வண்டிகளும், உரிகம் அருகே மஞ்சுகொண்டபள்ளியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்க வேண்டுமாம்.
மலைவாழ் மக்களின் உயிர் இவ்வளவு மலிவா?. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.








