Woman Rescued Within 24 Hours in Alleged Abduction Case in Hosur | Hosur News Update - Video
Woman Rescued Within 24 Hours in Alleged Abduction Case in Hosur
📅 வெளியீடு நாள்: 28-04-2026
📄 விளக்கம்
A young woman was allegedly abducted from her residence in Hosur after a pepper spray attack.
Police launched a swift investigation using technical tracking methods and rescued her within 24 hours from Karnataka.
Four individuals, including family members, have been arrested in connection with the incident.
ஓசூரில் பரபரப்பு. பெப்பர் ஸ்ப்ரே அடித்து மகளை கணவர் வீட்டில் இருந்து கடத்திய தாய்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேசிங், குடும்பத்துடன் ஓசூரில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது மகள் 21 வயது உடைய பிரியா, ஓசூர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 26 வயதுடைய சூரியா என்கிற வாலிபரை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்துக் கொண்டாராம்.
பிரியாவின் தாய் சகுந்தலா, சகோதரர்கள் பிந்து குமார், ஆகாஷ் மற்றும் கார் ஓட்டுநர் வக்கீல் ரத்தோட் ஆகியோர் அத்து மீறி பிரியாவின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து, பிரியாவை காரில் கடத்தினராம்.
ஹட்கோ காவல்துறையினர், Signal and Tower Location Tracking, CCTV footage, Car Chasing என அதிரடியாக செயல்பட்டு, பெண் கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு, பெண் 18 வயதை கடந்தவர் என்பதால், கணவரிடம் ஒப்படைத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட ஹட்கோ காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.








