Hosur Highway Engineers vs Thermocol King Sellur Raju! 😂😂 | Hosur News Update - Video
Hosur Highway Engineers vs Thermocol King Sellur Raju! 😂😂
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
Move over, Thermocol Raju — Hosur highway engineers have entered the comedy hall of fame!
In a scene straight out of a political satire, National Highway engineers have planted sticks right in the middle of the road near Gopachandram, claiming it’s for “accident prevention.” The result? Broken sticks, confused drivers, and bolts ready to puncture tyres.
It’s giving us serious throwback vibes to 2017’s “Thermocol Dam Project” — except this time, it’s sticks comedy on asphalt! 😂
ஓசூர் நெடுஞ்சாலை பொறியாளர்கள்... செல்லூர் ராஜுவின் தெர்மோகோலுக்கே சவால் விட துணிந்து விட்டார்கள்! அவர் தண்ணீரில் தெர்மோகோல் என்றால், இவர்கள் சாலையின் நட்ட நடுவே குச்சி நட்டு விளையாண்டு உள்ளார்கள்!
2017 ஆம் ஆண்டில், சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில், 60 தெர்மோகோல் அட்டைகளை வாங்கிக் கொண்டு, வைகை அணைக்கு சென்று, தண்ணீரில் அதை மிதக்க விட்டு, அணையை பாதுகாக்க முயன்றனர், அப்போதைய தமிழ்நாடு அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள்.
இந்த நகைச்சுவை இன்று வரை மக்களிடையே நினைவில் உள்ள நிலையில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டபள்ளி வனப்பகுதியை கடந்த உடன், கோபச்சந்திரம் அருகே, சாலை விபத்தை தவிர்க்க எனக் கூறி, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் பொறியாளர்கள், சாலையின் நட்ட நடுவே குச்சிகளை நட்டு, தங்களால் இயன்ற புது நகைச்சுவை ஒன்றை இயற்றியுள்ளனர்!
இவர்கள் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதே இல்லையா? என்று ஓசூர் முழுவதும் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. ஏனெனில் குச்சிகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி விட்டன. இப்பொழுது குச்சிகளை நிலை நிறுத்துவதற்காக அடித்த நட்டும் போல்ட்டும், பயணிக்கும் வண்டிகளின் டயர்களை பதம் பார்க்க காத்து நிற்கிறது.
60 தெர்மாக்கோலுக்கே 10 லட்சம் ரூபாய்னா... ஆயிரத்திற்கும் மேற்பட்ட குச்சிகளுக்கு என்ன செலவு கணக்கு எழுதி இருப்பார்கள்?