⚡ Hosur’s Shocking Transformer Thefts – Are They Being Kept to Be Stolen? 🤯 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

⚡ Hosur’s Shocking Transformer Thefts – Are They Being Kept to Be Stolen? 🤯

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

In Hosur and surrounding areas including Shoolagiri, Denkanikottai, Bagalur, Kelamangalam... high-value power transformers — each containing over 500 kg of copper and valuable oil worth ₹3–5 lakhs — are vanishing one by one! Every theft leaves villages without electricity for days, causing water shortages and crippling farmers’ livelihoods.

The big question remains — are these transformers just poorly protected… or deliberately placed for theft? Watch this video to uncover the alarming truth!

ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின்சார பகிர்மானத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்கள் எனப்படும் மின்மாற்றிகள் வைக்கிறார்களா? அல்லது திருடுவதற்காக அவை வைக்கப்படுகிறதா?

ஒவ்வொரு மின்மாற்றிலும் 500 கிலோவிற்கும் கூடுதலான செம்பு . இதனுடன் பல லிட்டர் விலை மதிப்பு மிக்க எண்ணெய்! ஒவ்வொன்றாக இவை மாயமாகிறது! ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை!

ஒவ்வொரு முறையும், மின்மாற்றி திருட்டு நிகழும் பகுதிகளில், மூன்று அல்லது நான்கு நாட்கள் மின்தடை. அதனால் குடிநீர் தட்டுப்பாடு. மேலும், விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாத சூழல். பயிர்கள் கருகி, உழவர்களுக்கு பொருளாதார நொடிப்பு.

ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருளுக்கு பாதுகாப்பு ஏன் இல்லை? வைக்கப்பட்ட மின் மாற்றிகள் திருடப்படுகிறதா? அல்லது திருடுவதற்காகவே அவை வைக்கப்படுகிறதா? துறை ரீதியான விசாரணை மட்டுமே உண்மையை வெளிச்சம் போடும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads