Special Worship Conducted at Cave Shiva Temple Near Kelamangalam | Hosur News Update - Video
Special Worship Conducted at Cave Shiva Temple Near Kelamangalam
📅 வெளியீடு நாள்: 17-05-2026
📄 விளக்கம்
Devotees gathered at the Nagalingeswara Swamy cave temple near Kelamangalam for a 24-hour continuous Shiva chanting and special worship event.
The temple, located inside a forested rocky region, attracts devotees seeking a spiritual experience amidst nature.
ஓசூர் அருகே குகை கோவிலில் சிறப்பு வழிபாடு. ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே, யானைகள் நடமாடும் காடுகளுக்குள் அமைந்துள்ளது நாகலிங்கேஸ்வர சுவாமி சிவாலயம். கெலமங்கலத்தில் இருந்து ரத்தினகிரி மற்றும் பேவநத்தம் சிவாலயங்களுக்கு செல்லும் வழியில், ஒன்னுகுறுக்கி ஊரில், பாறைகளுக்கு ஊடாக, குகையில் சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் கடந்த நாள் காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர்ந்து சிவனின் பெயர் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான சிவனடியார்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.








