New Anganwadi Centre Opened in Forest Hill Region Near Denkanikottai | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

New Anganwadi Centre Opened in Forest Hill Region Near Denkanikottai

📅 வெளியீடு நாள்: 19-05-2026

📄 விளக்கம்

A newly constructed Anganwadi centre has been opened in the Ayyur forest region near Denkanikottai.

The facility replaces a long-running rented setup that had operated for nearly 15 years and is expected to support children from remote hill communities.

The building was constructed on government land with support from officials and voluntary organizations.

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் காட்டின் நடுவே, உயரமான ஒரு மலையில் புதிய கட்டிடத்தில் அங்கன்வாடி நடுவம் திறப்பு.

சுமார் 15 ஆண்டுகளாக முறையான கட்டிடம் இல்லாமல், பழையூரில் இயங்கி வந்த அங்கன்வாடி, அரசுக்கு சொந்தமான இடத்தில், ஏழு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பொருட் செலவில் கட்டப்பட்டு கடந்த நாள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் குமார் அவர்களின் பலகட்ட அயராத முயற்சி, ஓசூர் லயன்ஸ் கிளப் பிரைட் அமைப்பின் தாமஸ் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் உடனடி நடவடிக்கையால், 2011 ஆம் ஆண்டு முதல் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த அங்கன்வாடி, தனக்கான இடம் மற்றும் கட்டிடத்தில் செயல்பட துவங்கியுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads