Abandoned Police Quarters Raise Concerns in Kelamangalam | Hosur News Update - Video
Abandoned Police Quarters Raise Concerns in Kelamangalam
📅 வெளியீடு நாள்: 19-05-2026
📄 விளக்கம்
Police quarters built on 110 cents of government land near the historic Kelamangalam police station are reportedly lying unused and in damaged condition.
The station, established in 1915, serves several remote villages with a population of nearly one lakh people.
Due to the lack of functional residential facilities, many police personnel are said to be commuting long distances daily from Hosur and surrounding areas.
Residents and volunteers have requested the government to provide proper housing facilities for police personnel.
கெலமங்கலத்தில் 22 கோடி மதிப்பிலான அரசு நிலம்… பாழடைந்து கிடக்கும் அவல நிலை!
கெலமங்கலம் காவல் நிலையம், பிரிட்டிஷார் ஆட்சியில் 1915ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழும் பல தொலைதூர ஊர்களை உள்ளடக்கிய இந்த காவல் நிலையத்தில், 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணிபுரிகின்றனர்.
காவலர்களுக்காக, காவல் நிலையம் அருகே 110 சென்ட் அரசு நிலத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தாலும், அவை இப்போது பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கின்றன.
இதனால், பெரும்பாலான காவல்துறையினர் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 20 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து வருகின்றனர். மேலும், வழக்குகள் தொடர்பாக, நாள்தோறும் தேன்கனிகோட்டை நீதிமன்றத்திற்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது.
முறையான காவலர் குடியிருப்புகளை அரசு உடனடியாக கட்டி தர வேண்டும் என்று பொதுமக்களும் தன்னார்வலர்களும் கோரிக்கை.








