Tribal Families Face Drinking Water Crisis in Forest Village Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Tribal Families Face Drinking Water Crisis in Forest Village Near Hosur

📅 வெளியீடு நாள்: 25-05-2026

📄 விளக்கம்

Residents of Kodagarai village inside the Ayyur forest region near Denkanikottai have reportedly been facing severe drinking water shortage for the past five days following damage to electricity lines connected to the village water pump.

The village is home to Irular tribal families and currently has ongoing government-supported housing construction works under district administration monitoring.

Locals say the disruption in water supply has affected both daily life and ongoing construction activities.

ஊருக்கு மின்சாரம் இருக்கு… பம்புக்கு மட்டும் இல்லை! தண்ணீரின்றி மக்கள் தவிப்பு!

ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை அருகே, அய்யூர் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் கொடகரை.

இப்பகுதியில் பழங்குடியின இருளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. தண்ணீர் தேவைக்காக, மேல்நிலைத் தொட்டி மற்றும் குழாய்கள் உள்ளது.

ஊருக்கு மும்முனை மின்சார இணைப்பு இருந்தாலும், தண்ணீர் பம்புக்கான மின்சாரம், பெட்டமுகிலாலம் அருகே அமைந்துள்ள காமகிரி எனும் ஊரிலிருந்து பூமிக்கு அடியில் எடுத்து வரப்படுகிறது.

மின் வடங்கள் பாதிப்புக்கு உள்ளானதால், கடந்த 5 நாட்களாக அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி அல்லல் பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் இந்த பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகள் கடந்த ஐந்து நாட்களாக முடங்கியுள்ளன என்பது அரசு அலுவலர்கள் கவனிக்க வேண்டியது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads