Hosur’s Unique College Class! 🚦Who made Hosur Traffic Wardens Teachers? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur’s Unique College Class! 🚦Who made Hosur Traffic Wardens Teachers?

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

In a packed auditorium at Hosur Government Arts College, more than 1,000 students joined an extraordinary road safety awareness session led by Hosur’s dedicated traffic wardens.

Using real accident videos, they challenged students to identify the causes — and the quick, spot-on answers left everyone stunned!

With no expectation of reward, these wardens are saving lives through awareness. Volunteers now call for such sessions in all colleges.

A powerful reminder: road safety starts in the classroom. 🚦

ஓசூர் டிராபிக் வார்டன்களுக்கு, ஓசூர் அரசு கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் என்ன வேலை? ஆர்வமுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், டிராபிக் வார்டன்களின் கேள்விகளுக்கு, டக் டக் என்று பதில்! காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு இந்த டிராபிக் வார்டன்கள் என்ன பயிற்சி கொடுத்தார்கள்?

கடந்த நாள் ஓசூர் அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை, ஓசூர் டிராபிக் வார்டன்கள் நடத்தினார்கள்.

சாலை விபத்துக்கள் குறித்து காணொளிகளை ஒவ்வொன்றாக திரையில் காட்டி, இந்த விபத்துக்கள் எதனால் ஏற்பட்டது என்று மாணாக்கர்களை பார்த்து கேட்ட பொழுது, பெரும்பாலான மாணாக்கர்கள் ஆர்வமுடன் விபத்திற்கான சூழ்நிலையை ஆராய்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் சரியான பதிலை கூறினார்.

இத்தகைய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், எல்லா கல்லூரியிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எவ்வித வருவாயையும் எதிர்பார்க்காமல், இவ்வாறு பொது தொண்டாற்றி வரும், டிராபிக் வார்டன்களை பாராட்டலாமே!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads