Why Has Irrigation Water Not Been Released from Thally Lake for 20 Years? Farmers Demand Answers | Hosur News Update - Video
Why Has Irrigation Water Not Been Released from Thally Lake for 20 Years? Farmers Demand Answers
📅 வெளியீடு நாள்: 31-05-2026
📄 விளக்கம்
Residents and farmers in Thally, near Hosur, have raised concerns about the condition of the historic Thally Lake. According to locals, the lake once supported irrigation for hundreds of acres of farmland, but water has reportedly not been released for irrigation for nearly two decades.
Allegations include encroachments, blockage of the irrigation sluice, pollution from waste dumping, and neglect of the lake ecosystem. Residents are calling for administrative intervention and restoration efforts.
ஓசூரை அடுத்த தளியில் 248 ஏக்கர் குத்தகை வெறும் ரூபாய் ஒரு லட்சம் மட்டும்?. 20 ஆண்டுகளாக திறக்கப்படாத மதகின் P W D மர்மம் என்ன?. கேள்வி எழுப்பும் உள்ளூர் உழவர்கள்!.
பிரிட்டிஷாரால் லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்பட்ட தளியில், அதன் அடையாளமாக விளங்குவது தளி ஏரி. தேவரபட்டா அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இருந்து ஆறாகத் தோன்றி, இந்த ஏரியின் வழியாக பஞ்சப்பள்ளி அணையை சென்றடைந்து, அங்கிருந்து சின்னாராக தர்மபுரி மாவட்டத்திற்கு பாய்கிறது. பஞ்சப்பள்ளி அணைக்கும் முன் பகுதி வரை, சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி நீரின் மூலம் பயன் பெற்று வந்ததாக அப்பகுதி உழவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏரியின் மொத்த பரப்பளவு 248 ஏக்கர் என ஆவணங்களில் கூறப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சுமார் 40 ஏக்கர் வரையிலான நிலங்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் துணையுடன் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
2005ஆம் ஆண்டு வாக்கில், பெருமழையால் ஏரிக்கரை உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, சரி செய்யப்பட்ட நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, ஏதோ ஒரு நோக்கத்துடன், பாசனத்திற்கு அந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது இல்லை என அப்பகுதி தன்னார்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பாசனத்திற்கு தண்ணீர் திறந்த விட பயன்படும் மதகு எம் சாண்ட் போட்டு நிரப்பப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கோழி மற்றும் விலங்கு கழிவுகள், இந்த ஏரியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. கழிவு நீரும் இந்த ஏரியில் திருப்பி விடப்படுவதால், ஏரி மாசடைந்து ஆகாய தாமரை படர்ந்து காணப்படுகிறது.
தளியின் அடையாளமான இந்த ஏரியை முழுமையாக மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?.








