48 Acres of Government Poramboke Land Near Anchetty: How Did the Encroachment Continue? | Hosur News Update - Video
48 Acres of Government Poramboke Land Near Anchetty: How Did the Encroachment Continue?
📅 வெளியீடு நாள்: 29-08-2026
📄 விளக்கம்
A HosurOnline ground report examines allegations of encroachment of Tamil Nadu government poramboke land near Anchetty, including questions over electricity infrastructure, road construction and the response of revenue and forest officials. Claims of political intervention are also examined and presented as allegations requiring verification.
தமிழ்நாடு அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பிற்கு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஆதரவா? அஞ்செட்டி வருவாய் வட்டத்தில் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள், தமிழ்நாடு அரசு புறம்போக்கு நிலங்களை, பல ஆயிரம் ஏக்கர் அளவில் உலிபண்டா மற்றும் அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றளவும் ஆக்கிரமித்து உள்ளதாக தகவல்.
ஆக்கிரமிப்பை எப்படி மேற்கொள்கிறார்கள்?
கர்நாடக மாநிலம் பெங்களூர்வை சேர்ந்த மருத்துவர் எம் கே ஸ்ரீதர். அஞ்செட்டி வட்டம், திம்மேனட்டி அருகே சுமார் ஒன்றரை ஏக்கர் பட்டா நிலத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வாங்கினாராம்.
அந்த நிலத்தின் அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில், பகுதி மக்கள் சிலர் கேழ்வரகு உள்ளிட்ட அடிப்படை உணவு தேவைகளை உற்பத்தி செய்து வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து, 48 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை, தரகர்களின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் கைமாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் வாங்கியது ஒன்றரை ஏக்கர், எடுத்துக் கொண்டது தமிழ்நாட்டின் அரசு புறம்போக்கு நிலம் 48 ஏக்கர்?.
ஓசூர் சார் ஆட்சியர், குறிப்பிட்ட இந்த நிலத்தை எந்த ஒரு அழுத்தங்களுக்கும் பணியாமல் மீட்டெடுத்து உள்ளார். பாராட்டுக்கள்.
அரசு துறையினர் எவ்வாறெல்லாம் இந்த ஆக்கிரமிப்பிற்கு உதவி உள்ளனர்?
பட்டா நிலத்தில் மின் மாற்றி - டிரான்ஸ்பார்மர் அமைத்து, அங்கிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட 48 ஏக்கரின் கடைசி எல்லை வரை, மின்வாரியம் சார்பில் சுமார் பத்து கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தினாலும் மின் இணைப்பு வழங்க தயக்கம் காட்டும் மின்வாரியம், எதன் அடிப்படையில், ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு தனிப்பட்ட முறையில் மின்மாற்றி அமைத்துக் கொடுத்து, சுமார் பத்து ஆழ்துளை கிணற்றிற்கு நீர் உந்திகளை இயக்க அனுமதி வழங்கினர் என்ற கேள்வியை அப்பகுதி உழவர்கள் எழுப்புகின்றனர்.
"மின்வாரிய பொறியாளர்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கும், 48 ஏக்கர் நிலத்திற்கும் அளவு வேறுபாடு தெரியவில்லை" என அஞ்செட்டி வட்டாட்சியர் நம்மிடம் தெரிவித்தார். ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக, கர்நாடக மாநில அமைச்சர்களும் தமக்கு அழுத்தங்கள் கொடுத்ததாக அவர் தெரிவித்தது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலை மீது தனி நபர் ஒருவர், பெரிய இயந்திரங்களைக் கொண்டு சாலை அமைக்கிறார் என்பதை இரண்டு ஆண்டுகளாக வனத்துறையினரும், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினரும் எவ்வாறு கவனிக்காமல் விட்டனர், என்ற கேள்வியை அஞ்செட்டி தன்னார்வலர்கள் நம்முன் வைத்தனர்.








