Hosur Bridge Comedy 🤦♂️ | Road Closed but No Work in Progress! | Hosur News Update - Video
Hosur Bridge Comedy 🤦♂️ | Road Closed but No Work in Progress!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
🚧 In Hosur, the Bagalur Road bridge near the bus stand has been closed for over 60 days after a sudden bearing failure.
But here’s the twist 🤔 — while traffic is completely blocked, no repair work is seen on site. Instead, only a green shade net has been tied around, leaving locals to joke whether it’s for safety or just decoration! 🎭
💬 Inspired by Actor Vivek’s famous tea kadai comedy, the situation raises a punchy question:
👉 “Bridge closed… but for whom, sir?”
Locals continue to suffer traffic chaos, while laughing through the irony.
பாகலூர் சாலையை மொத்தமாக முடித்து புதியதோர் சாதனை! பாலத்தில் வேலையே நடக்கவில்லை... யாருக்காக ஐயா இந்த பாதையை மூடி வைத்துள்ளீர்கள்?
கடந்த ஜூன் 21 ஆம் நாள் ஓசூர் பேருந்து நிலையம் நேர் எதிர் புறம் அமைந்துள்ள பாலம் திடீரென ஒருபுறம் சரிந்து நின்றது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, பாலத்தில் சென்ற வண்டிகள் பிரேக் பிடித்ததால், பியரிங் உடைந்து விட்டதாக, தகவல் தெரிவித்தனர்.
பியரிங் உடைந்து அறுபது நாட்கள் கடக்கின்ற நிலையில், பிரேக் பிடிக்காமல் பயணிப்பது எப்படி என்பதை வண்டி ஓட்டிகள் கற்றுக்கொடுக்காமல், இப்போது மொத்தமாக அந்தப் பகுதி முழுவதையும் சாலை போக்குவரத்திற்கு தடை செய்து வைத்துள்ளனர்.
ஏதாவது அங்கே பணி நடக்கிறதா என்று, நேரில் சென்று பார்த்த பொழுது, பச்சை நிறத்தில் Shade Net மட்டும் கட்டி வைத்துள்ளனர். பாலத்தில் சரி செய்வதற்கான வேலை நடக்கவில்லை... பாலம் சரிந்து விழுந்தால் தாங்கிக் கொள்வதற்காக இந்த நெட் கட்டி வைத்துள்ளனரா? என பொது மக்களில் ஒருவர் நக்கலாக கேள்வி எழுப்பி விட்டு நழுவினார்!