Hosur’s Little Ooty = Panchapalli Dam🌿✨ | Must-Visit Picnic Spot! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur’s Little Ooty = Panchapalli Dam🌿✨ | Must-Visit Picnic Spot!

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Looking for a peaceful weekend escape near Hosur? 🌄

Welcome to Panchapalli Dam, also called Hosur’s Little Ooty – surrounded by lush green hills, forests, and breathtaking views. 🌿

Built in 1969, this dam is unique because its reservoir is in Krishnagiri district, while its bund lies in Dharmapuri district!

📍 Distance: Just 44 km from Hosur via Denkanikottai (the safest and most scenic route).
🚗 The journey itself is magical – forests, village roads, and endless greenery on both sides.

Bird songs, calm waters, and mountain views make this a perfect one-day picnic spot for families and friends. 🕊️

👉 If you want nature + peace, Panchapalli Dam is waiting for you!

தேன்கனிக்கோட்டை அருகே, அற்புதமான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் அழகிய இடம் – பஞ்சப்பள்ளி அணை! இதற்கு மற்றொரு பெயர் ஓசூரின் லிட்டில் ஊட்டி. மலைகளும் மலை சார்ந்த பசுமையும் உங்களை மெய் மறந்து போக வைக்கும்.

1969-ல் கட்டப்பட்ட இந்த அணை, சின்னாறு தோன்றுமிடத்தில் அமைந்துள்ளது. அணையின் நீர்த்தேக்க பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அணையின் மதகுகள் தர்மபுரி மாவட்டத்திலும் அமைந்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.

ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக இந்த அணையை 44 கிலோ மீட்டர் பயணித்து சென்றடையலாம். மாற்றுப்பாதைகள் இருப்பினும், தேன்கனிக்கோட்டை வழியாக செல்வது பாதுகாப்பானது. பாதை முழுவதும் காடுகளும், கிராமப்புற சாலைகளும். உண்மையிலேயே, பயணம் முழுவதும் சாலையின் இரு மருங்கிலும் கொட்டிக்கிடக்கும் அழகு நம்மை முழுமையாக வேறொரு உலகத்திற்கு எடுத்துச் சென்று ரசிக்க வைக்கும்.

அணை சுற்றிலும் பசுமையான மலைகள், பறவைகளின் குரல்கள், நீர் நிலையின் அமைதியான காட்சி. மனதை குளிர வைக்கும் அனுபவம் தரும்.

ஒரு நாள் பிக்னிக் ஸ்பாட்டாக, பஞ்சப்பள்ளி அணை உங்களை என்றென்றும் வரவேற்கும்!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads