📰 Hosur Journalists Pushed எடப்பாடியின் மெய்காப்பாளர்களால், ஊடக நண்பர்கள் தள்ளிவிடப்பட்டனர். | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

📰 Hosur Journalists Pushed எடப்பாடியின் மெய்காப்பாளர்களால், ஊடக நண்பர்கள் தள்ளிவிடப்பட்டனர்.

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

📌 Respect for the press isn’t just courtesy – it’s democracy in action.

In Hosur, journalists covering Edappadi Palaniswami’s visit faced an unexpected push from his security team, causing some to fall. EPS left without giving an interview, leaving many in surprise.

Volunteers reminded that respect and safety for the press is a cornerstone of democracy. Affected journalists shared that no leader in Hosur has ever treated the media this way before.

எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர்களால் முரட்டுத்தனமாக தள்ளிவிடப்பட்ட எமது ஊடக நண்பர்கள்...

எடப்பாடி பழனிச்சாமியின் மெய்காப்பாளர்களால், எமது ஊடக நண்பர்கள் தள்ளிவிடப்பட்டனர். இதில் சிலர் கீழே விழுந்து, எழுந்து, நிற்க நேரிட்டது.

அந்த நேரத்தில், பழனிச்சாமி நேர்காணல் வழங்காமல் புறப்பட்டுச் சென்றார்.

இந்த காட்சியைப் பார்த்த தன்னார்வலர் ஒருவர், குடியாட்சி தத்துவத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஊடகத்துக்கு, மரியாதை மற்றும் பாதுகாப்பு அளிப்பது அரசியல் அடிப்படை பண்பு, எனக் கூறினார்.

பாதிப்புக்கு உள்ளான ஊடக நண்பர் ஒருவர் இது குறித்து குறிப்பிடும் பொழுது, இது போன்று ஒரு முறை கூட எந்த தலைவரும் ஓசூர் ஊடகவியலாளர்களை கையாண்டது இல்லை என மனவேதனையுடன் குறிப்பிட்டார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads