ATM Robbery Reported in Hosur HUDCO Area | Hosur News Update - Video
ATM Robbery Reported in Hosur HUDCO Area
📅 வெளியீடு நாள்: 06-05-2026
📄 விளக்கம்
An ICICI Bank ATM in the Bagalur HUDCO area of Hosur was reportedly broken open during the night, and cash was stolen.
The incident was discovered the following day when officials arrived to refill the ATM.
Police have launched an investigation and are reviewing CCTV footage from nearby locations.
ஓசூரில் ஐ சி ஐ சி ஐ வங்கி ஏ டி எம் உடைத்து கொள்ளை. ஓசூர் பாகலூர் ஹட்கோவில் அமைந்துள்ள ஐ சி ஐ சி ஐ வங்கியின் ஏ டி எம் இயந்திரத்தை கடந்த நாள் நள்ளிரவில் உடைத்து, ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த நிகழ்வு, மறுநாள் பகலில் நெடுநேரம் ஆகியும் அக்கம் பக்கத்தினர் யாரும் உணரவில்லை. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்தவர்கள், நடுவத்தின் ஷட்டர் பூட்டப்பட்டு இருப்பது கண்டு, ஹட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.








