Hosur Chain Snatching Attempt: Software Professional Arrested, 45 Grams of Jewellery Found to Be Imitation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Chain Snatching Attempt: Software Professional Arrested, 45 Grams of Jewellery Found to Be Imitation

📅 வெளியீடு நாள்: 11-01-2026

📄 விளக்கம்

A chain snatching attempt on Rayakottai Road in Hosur ended with the arrest of a 32-year-old software designer working in Bengaluru. The accused, reportedly in debt due to online gaming and gambling losses, was caught by the public while trying to escape. Police confirmed that the seized 45 grams of jewellery were imitation ornaments.

ஓசூரில் chain snatching, escaping, chasing. ஓசூர் ராயக்கோட்டை அட்கோவில் M B A பட்டதாரிக்கு ஏற்பட்ட இழிவு நிலை!. கழுத்தில் இருந்து அறுத்தது என்னவோ நகைகளை தான். ஆனால் கையில் கிடைத்த 45 கிராம் நகைகள் அனைத்தும் கவரிங்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதுடைய தீபன்ராஜ், எம் பி ஏ பட்டதாரி. மென்பொருள் வடிவமைப்பாளராக பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். ஓவர் நைட்ல ஒபாமா ஆக வேண்டும் என Online Gaming, Gambling போன்றவற்றில் பணம் ஈட்ட முயற்சி செய்து, இருக்கும் பணத்தை இழந்து, கடன் சுமையில் உள்ளாராம்.

ஓசூருக்கு போய் செயின் பறித்து பணக்காரராகலாம் என, ராயக்கோட்டை சாலையில் நடந்து வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து, தனது இரண்டு சக்கர வண்டியில் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அருகில் இருந்த இளைஞர்கள் அவரை விரட்டி பிடித்து, ஓசூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினரிடம், தான் ஒரு எம் பி ஏ பட்டதாரி என்ற அவருக்கு, அவர் பறித்த நகைகள் அனைத்தும் கவரிங் என பதில் சொன்னதால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவருக்கு.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads